Chiyaan 63: 23 வருடங்களுக்குப் பிறகு புதுமுக இயக்குநருடன் இணையும் விக்ரம்! - வெள...
திருப்பூர்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை - அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது
திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகராட்சி மன்ற 12-ஆவது வார்டு அதிமுக உறுப்பினராக உள்ளவர் சாந்தி. இவரது கணவர் ராஜேந்திரன் (45). சொந்தமாக இருசக்கர வாகனம் ஒர்க்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் அப்பகுதியில் வசித்து வந்த சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், ராஜேந்திரன் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ராஜேந்திரன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உடுமலைப்பேட்டை அருகே உள்ள சந்தனகருப்பனூரைச் சேர்ந்தவர் சிவசக்தி (40). அதிமுக பிரதிநிதியான இவர், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சிவசக்தியை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிமுகவினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.















