காலணிகளைக் கழற்றி, சிறப்புப் பூஜை, லண்டன் இந்து கோயிலில் வழிபட்ட பிரிட்டன் மன்னர...
உலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது வரிகளை விதித்து தள்ளியிருக்கிறார்.
இந்த வரிகள் அமெரிக்காவிற்கு அதிக பணத்தைக் கொண்டு வரும். இதனால், அமெரிக்காவின் கடன்களை வெகுவாக குறைக்கலாம். அமெரிக்க மக்களுக்கு பெரிய நன்மை பயக்கும் என்று ட்ரம்ப் கூறிவருகிறார்.
இப்படி ட்ரம்ப் விதித்த வரிகள் அமெரிக்காவிற்கு எவ்வளவு பணத்தைக் கொண்டு வந்துள்ளது என்பதற்கான தரவுகள் வெளியாகி உள்ளன.

2023-24 நிதியாண்டில், அமெரிக்காவின் சுங்க வரித் துறையின் வருமானம் 77 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இந்த நிதியாண்டில் அதாவது 2024-25 நிதியாண்டில், அமெரிக்காவின் சுங்க வரித் துறையின் வருமானம் 194.86 பில்லியனாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட, 156 சதவிகிதம் அதிகம் ஆகும்.
கடந்த நிதியாண்டில், அமெரிக்காவின் ஒட்டுமொத்த வருமானத்தின் சுங்க வரிகளின் பங்கு என்பது 1.57 சதவிகிதமாக இருந்தது. அது இந்த நிதியாண்டில் 3.72 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை நிதியாண்டு என்பது அக்டோபர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஆகும்.















