செய்திகள் :

மியான்மரில் சீன மாஃபியா பிடியில் தப்பிய 500 இந்தியர்கள்; தாய்லாந்து டு தாய்நாடு திரும்புவது எப்போது?

post image

``மியான்மரில் இருந்து தாய்லாந்துக்குத் தப்பி வந்த 500 இந்தியர்களை, இந்தியா மீண்டும் அழைத்துக்கொள்ளும்'' என்று தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் மாஃபியாக்களால் நடத்தப்படும் கே.கே பார்க் மோசடி, சைபர் கிரைம் காம்பவுண்டில் மியான்மர் ராணுவம் சோதனைகளை நடத்தி வருகிறது.

கடந்தவாரம் நடத்தப்பட்ட சோதனையின் விளைவாக 28 நாடுகளைச் சேர்ந்த 1500 பேர் தாய்லாந்து எல்லை நகரமான மே சோட்டுக்குத் தப்பிச் சென்றனர்.

இந்த சோதனையில் இருந்து தப்பிய 500 இந்தியர்கள் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

KK Park cybercrime compound
KK Park cybercrime compound

பெருகிய மோசடி காம்பவுண்ட்கள்

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மியான்மர், லாவோஸ், கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் எல்லைகளில் மோசடி மையங்கள் பெருகியுள்ளன. லட்சக்கணக்கான மக்களை கடத்திச் சென்று இந்த மையங்களில் வேலை செய்ய வைப்பதன்மூலம் பில்லியன் கணக்கான டாலர்கள் சம்பாதித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

கே.கே பார்க் நாடு கடந்த சைபர் மோசடிகளுக்கு பெயர்பெற்ற இடமாக உள்ளது. இந்த பெரிய வளாகமும் மற்ற மையங்களும் பெரும்பாலும் சீன மாஃபியா கும்பல்களால் நடத்தப்படுகின்றன.

இவற்றைப் பாதுகாக்க உள்ளூர் ஆயுத கும்பல்களும் சில நேரங்களில் மியான்மர் ராணுவத்துடன் இணைந்த குழுக்களும் செயல்படுகின்றன.

பிரதமர் அனுடின் சார்ன்விரகுல்

திருப்பி அனுப்பத் திட்டம்

தப்பி வந்தவர்களின் சட்டப் பின்னணியை சரிபார்த்து விரைவாக திருப்பி அனுப்ப இந்தியாவின் தூதர் தாய்லாந்து குடியேற்ற தலைமை அதிகாரியை சந்திப்பார் என பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார்.

"அவர்கள் நமக்கு இந்த சுமையைத் தர விரும்பவில்லை. நேரடியாக மே சோட்டுக்கு விமானம் அனுப்பவுள்ளனர்" எனக் கூறியுள்ளார் அனுடின்.

தாய்லாந்தில் தேவையான சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்தபிறகு அவர்களின் தேசிய குடியுரிமை சரிபார்க்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என வெளியுறவுத்துறை செயலளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ... மேலும் பார்க்க

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சி... மேலும் பார்க்க

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்... கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக ... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க

புதுச்சேரியை உலுக்கிய மருந்து கொள்முதல் முறைகேடு - சிக்கிய அதிகாரிகள்; சிக்கலில் ஆட்சியாளர்கள்

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19 ஆண்டு கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்... மேலும் பார்க்க

குருபூஜை: "எடப்பாடிதான் எங்கள் எதிரி" - செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று முத்துராமலிங்கனர் சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுக தொண்... மேலும் பார்க்க