Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cide...
திருவண்ணாமலையில் ராசி தீபம் ஏற்றுவது மிக முக்கியம் - ஏன் தெரியுமா?
வரும் 2025 டிசம்பர்-3ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு மேல் கார்த்திகை தீப நன்னாளில் திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு நடத்த உள்ளது. நினைத்தது நிறைவேற கார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலையில் உங்களுக்காக ராசி தீபம் ஏற்றுங்கள்!
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நாளில் விளக்கேற்றி வழிபட்டால் உங்கள் 21 தலைமுறைக்கும் ஆயுளும் ஐஸ்வர்யமும் நிலைக்கும் என்பது அருணகிரி தலபுராணம் சொல்லும் திருவாக்கு. கேட்டதை எல்லாம் கொடுக்கும் திருத்தலம் திருவண்ணாமலை, கேட்டதுக்கு மேலேயும் கொடுப்பவர் அண்ணாமலையார் என்பார் ரமண மகரிஷி. பிரம்மன், விஷ்ணு மட்டுமின்றி சகல உயிர்களும் தன்னை வடிவாக ஒரு ஒளியாக தரிசிக்க வேண்டும் என்ற காரணத்தால் ஈசன் முதன்முதலில் ஒளி வடிவாக எழுந்த தலம் திருவண்ணாமலை. அதனாலேயே இங்கே தீபம் வழிபாடு சிறப்பானது. அதுவும் தீபம் எழுந்த கார்த்திகை திருநாள் வழிபாடு இன்னும் சிறப்பானது.
தபோவனர்களின் புனித பூமியான திருவண்ணாமலையில் நவகோடி சித்தர்களும் உலாவி வருகிறார்கள் என்பது நம்பிக்கை. அதில் சித்த யோகினியாக இன்றும் உலாவி வருபவர் அம்மணி அம்மன். பெண்கள் கட்டுப்பெட்டியாக வாழ்ந்த அந்த காலத்திலேயே சிவபக்தியில் திளைத்து யோகினியாக ஒரு காற்றைப்போல திரிந்து பல அற்புதங்கள் செய்தவர். திருவண்ணாமலையில் ஈசான்ய லிங்கத்தின் எதிரே சுடுகாட்டில் அமர்ந்து ஜீவசமாதி நிலையில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். தன்னை நாடிவரும் எல்லோருக்கும் அருள் செய்யும் சித்தசக்தியாக விளங்கி வருகிறார். திருவண்ணாமலைக்கு அருகே உள்ள சென்னசமுத்திரத்தில் அருள்மொழியாக அவதரித்து ஈசன் மீது அளவில்லாத அன்பு கொண்டவர்.

திருமணத்தின் மீது பற்றில்லாத காரணத்தால் குளத்தில் விழுந்த இவர், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து அதிலிருந்து எண்ணற்ற அற்புதங்கள் புரிந்தவர். எவராலேயும் முடியாத திருப்பணியான திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு கோபுரத்தை கட்டி தனிப்பெண்ணாக நின்று அற்புதங்கள் செய்து எழுப்பினார். 171 அடிகள் உயரம் கொண்ட அந்த பிரமாண்ட கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே இன்றும் உள்ளது. சுமார் 160 ஆண்டுகளுக்கு வாழ்ந்து தன் வாழ்க்கையை முடித்துக்கொண்ட இந்த சித்தர் ஒரு தைப்பூச நாளில் அண்ணாமலையாரோடு கலந்தார்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
சிறப்புகள் பல கொண்ட இந்த புண்ணிய ஜீவசமாதி தலத்தில் சக்தி விகடன் வாசகர்கள் நலனுக்காக இம்முறை வரும் 2025 டிசம்பர்-3ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு மேல் கார்த்திகை தீப நன்னாளில் ராசி தீப வழிபாடு நடத்த உள்ளது. அதாவது உங்கள் பெயரில் ஒரு தீபம் ஏற்றி உங்கள் குடும்பமும் நட்பும் சுற்றமும் உறவும் சிறந்து வாழ பிரார்த்திக்க உள்ளது. கவலைகள், கடன், நோய்கள், முன்னேற முடியாத கஷ்ட நிலை என துன்பப்படும் எல்லோரும் எல்லோருமே கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய வழிபாடு இது. இந்த வழிபாட்டில் பதிவு செய்யும் ஒவ்வொரு நபரின் பெயருக்கும் ராசிக்கும் சிறப்பு தீபம் ஏற்றி, அபூர்வ ஸ்படிக லிங்க அபிஷேக வழிபாடு செய்யப்படும். இதனால் உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆயுளும் அபிவிருத்தியும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் கூடும் என்பதும் நிச்சயம்.

மேலும் மங்கல காரியங்கள் யாவும் கைகூடும். தோஷங்கள் பாவங்கள் சாபங்கள் யாவும் நீங்கி வாழ்வில் முன்னேற்றமும் வளர்ச்சியும் கூடும் என்பது உண்மை.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ராசி தீப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், தீப சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ கவச குங்குமம், விபூதி, ரட்சை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan


















