செய்திகள் :

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்: கிரிவலப் பாதையில் சகல வளங்களும் அருளும் சிவன் சந்நிதிகள்

post image

நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. அங்கே மலையே ஈசனாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். மேலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலும் மிகவும் சிறப்புவாய்ந்தது.

ஒருமுறை அண்ணாமலையாரைத் தரிசனம் செய்தால் மீண்டும் மீண்டும் அவரைத் தரிசிக்கும் ஆவலும் பாக்கியமும் பிறந்துகொண்டே இருக்கும்.

மேலும் திருவண்ணாமலை என்றாலே கிரிவலம்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அப்படி கிரிவலம் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டியவையே அஷ்ட லிங்கங்கள்.

அஷ்ட லிங்கங்களும் கிரிவலப் பாதையில் எங்கு அமைந்துள்ளன... வாருங்கள் அவற்றை தரிசிப்பதால் என்ன பலன் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

முதலாவதாக கிரிவலப் பாதையில் நாம் தரிசிக்கும் லிங்கம் இந்திர லிங்கம். அண்ணாமலையார் கோயிலின் ராஜ கோபுரத்தின் அருகில், கிழக்கு திசையில் அமைந்திருப்பது.

இந்திரன் வழிபட்ட லிங்கம் என்பதால் இதற்கு இந்தப் பெயர் உண்டானது. ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் சுகங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலை கிரிவலப் பாதை
திருவண்ணாமலை கிரிவலப் பாதை

கிரிவலப்பாதையில் அடுத்து நாம் தரிசனம் செய்வது அக்னி லிங்கம். அக்னி என்றால் நெருப்பு. நெருப்பு என்றால் சூரியன். எனவே சூரியனைத் தன் ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மூர்த்தி இவர்.

சந்திரனுக்கு அக்னி வடிவில் காட்சியளித்த லிங்கமே இங்கு குளிர்ந்து அக்னி லிங்கமாகக் காட்சியளிக்கிறதாம். சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்துக்கு அருகில் உள்ள இந்த ஆலயத்துக்கு வந்து இறைவனை வழிபட்டால் மனக் குறைகள் விலகும். நிம்மதியான வாழ்க்கை ஸித்திக்கும்.

தொடர்ந்து சிவநாமத்தைச் சொல்லிக்கொண்டே நடந்தால் யம லிங்கத்தை அடையலாம். தென்திசை அதிபதியான யம தர்மன் ஈசனை வழிபட்ட லிங்கம் இது. தன் பாவங்கள் விலக கிரிவலம் சென்ற யமனுக்கு, சிவபெருமான் தாமரை மலரில் லிங்கமாகத் தோன்றி அருளினார். இந்த ஆலயத்து இறைவனை வழிபடுவதால் ஆயுள் பலம் உண்டாகும். வீண் விரயங்கள் நீங்கும். விருச்சிக ராசிக்காரர்கள் அவசியம் வணங்க வேண்டிய சந்நிதி இது.

தென்மேற்கு திசையின் அதிபதி நிருதி பகவான். திருவண்ணாமலைத்தலத்தில் ஈசனை நோக்கித் தவம் செய்த நிருதி பகவானுக்கு ஈசன் நிருதீஸ்வரராக காட்சி அளித்தாராம். அவரே அங்கே நிருதி லிங்கமாகவும் எழுந்தருளியிருக்கிறார்.

இவரை வழிபட்டால் குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. மேஷ ராசிக்காரர்களின் பிரார்த்தனைத் தலம் இது. ராகு பகவான் இந்தத் திசைக்கு அதிபதி என்பதால் இங்கு வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும். தீய எண்ணங்கள் விலகி மனம் அமைதி அடையும்.

வருண பகவானுக்கு ஈசன் இத்தலத்தில் நீரே லிங்க வடிவில் உருமாறி தரிசனம் அருளிய தலம் இது. மேற்கு திசையில் அமைந்திருக்கும் இந்த லிங்கத்தை வணங்கினால் அந்தத் திசையின் அதிபதியான சனி பகவானின் அருளைப் பெறலாம்.

ஏழரைச் சனி, அஷ்டம சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட சகல துன்பங்களும் விலகும். மேலும் தீராத நோய்களைத் தீரும். குறிப்பாக மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் இவரை வழிப்பட்டு வாழ்வில் சகல வளங்களையும் பெறலாம்.

கிரிவலப் பாதையில் வடமேற்கு திசையில் அமைந்திருக்கும் ஆலயம் இது. பஞ்ச கிருதிக்கா என்ற தேவலோக மலரின் வாசமாகத் தோன்றிய ஈசன் வாயு பகவானை இங்கு ஆட்கொண்டாராம்.

கடக ராசிக்காரர்கள் கட்டாயம் வணங்க வேண்டிய தலம் இது. இங்கு வந்து வணங்குபவர்களுக்கு, வடமேற்கு திசையின் அதிபதியான கேது பகவான் சகல யோகங்களையும் அளிப்பார். ஞானத்தைப் பெற்று வாழ்வில் பல நலன்களை அடைய இந்தச் சந்நிதி வழிபாடு பயன் தரும்.

இந்த உலக வாழ்க்கை செழிக்கத் தேவை செல்வம். செல்வ வளம் அருள்பவர் குபேரன். அப்படிப்பட்ட குபேரனே இழந்த தன் செல்வங்களை மீண்டும் பெற திருவண்ணாமலையில் அமர்ந்து தவம் செய்தாராம்.

ஈசன் மனம் இரங்கி அவருக்கு இழந்த செல்வத்தைப் பெற்றுத்தந்த ஈசன் அச்செல்வம் எந்த நாளும் குறையாமல் பல்கிப் பெருகவும் வரம் தந்தார் என்கிறது புராணம்.

எனவே குபேரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்தக் குபேர லிங்கத்தை நாம் தரிசித்தாலே நம் வறுமைகள் விலகும். மென்மேலும் செல்வ வளம் சேரும். குரு பகவானின் திருவருளைப் பெற்ற தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய சுவாமி இவர்.

நிறைவாக கிரிவலப் பாதையில் வடகிழக்கு திசையில் சுடலையின் அருகில் அமைந்துள்ளது ஈசான்ய லிங்கம். நந்தீஸ்வர பகவான் வணங்கிய மூர்த்தி இவர். ஈசனைத் தவிர எதுவுமே சாஸ்வதமில்லை என்பதை உணர்த்தும் ஞான சந்நிதி இது.

இந்தத் திசையின் அதிபதி புதன் என்பதால் இங்கு வணங்கினால் கலைகளில் தேர்ச்சி பெறலாம். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய சந்நிதி இது.

திருக்கோழம்பியம்: `கால்நடைகளின் பிணி தீர்க்கும் அறுகம்புல்' - பசுவாக அம்பிகை தவம் இருந்த தலம்

அம்பிகை மண்ணுலகுக்கு வந்து ஈசனை நினைத்துத் தவம் இருந்த தலங்கள் அநேகம் உண்டு. அவற்றுள்ளும் அம்பிகை பசுவாக வந்து ஈசனை வழிபட்ட தலங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அப்படி ஒரு தலம்தான் திருக்கோழம்பியம். ம... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ``ராஜ ராஜ சோழன் 1,040-வது சதய விழா'' - தங்க நிறத்தில் ஜொலித்த பெரிய கோயில்!

சோழப் பேரரசர்களில் தலைச்சிறந்த மன்னனாக திகழ்ந்தவர் மாமன்னன் ராஜராஜசோழன். இவர் எழுப்பிய தஞ்சாவூர் பெரியகோயில் 1,000 ஆண்டுகளை கடந்தும் வானுயர்ந்து, அழகும் கம்பீரமும் ஒருசேர அமைந்து சோழர்களின் அடையாளமாக ... மேலும் பார்க்க

தஞ்சை, திருப்பனந்தாள் சிவாலயம்: பக்தைக்கு உதவத் தலை சாய்த்த ஈசன்; குருவாக அருளும் அருணஜடேஷ்வரர்!

குருவருள் இருந்தால் சகலத்தையும் வெல்லலாம் என்பார்கள். அப்படி ஞானத்தை நமக்கு அள்ளித்தரும் குருமார்கள் அநேகர் இந்த மண்ணில் வாழ்ந்தனர்... வாழ்கின்றனர். குரு என்பவர் ஈசனின் வடிவம். ஈசனே குருவானால் அதைவிட ... மேலும் பார்க்க

1040 வது சதய விழா: மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோயில் | Photo Album

மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோயில்.ராஜராஜ சோழன் சிலைராஜராஜ சோழன் சிலைராஜராஜ சோழன் சிலைராஜராஜ சோழன் சிலைராஜராஜ சோழன் சிலைமின்னொளியில் ஜொலிக்கும் சாலைகள்மின்னொளியில் ஜொலிக்கும் சாலைகள்மின்னொளியி... மேலும் பார்க்க

நாகப்பட்டினம் எட்டுக்குடி முருகன் கோயில்: தண்ணீர் பாலாக மாறிய அதிசயம் நிகழ்ந்த தலம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளும் மிகவும் சிறப்பானவை. அதற்கு இணையான தலங்களும் ஏராளமாக உள்ளன. அதிலும் முருகப்பெருமான் தன் பக்தர்களுக்குக் காட்சி அருளி அவர்களின் வாழ்வை மாற்றிய தலங்களும் அநேகம். அப்படி... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே கூனஞ்சேரி: 1,000 ஆண்டுப் பழைமை; உடல் குறைபாடுகள் நீக்கும் அஷ்ட பைரவ லிங்கங்கள்!

பழைமையான ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பை உடையன. அவற்றுள் உடல் நலம் பேண நாம் வழிபட வேண்டிய ஆலயங்கள் பல உள்ளன. அப்படி ஒரு ஆலயம்தான் கூனஞ்சேரியில் இருக்கும் கயிலாயநாதர் திருக்கோயில்.தஞ்சை மாவட்டம் பாபநா... மேலும் பார்க்க