செய்திகள் :

திண்டுக்கல்: `பாஸ்கு மைதானம்னு பேரை மாத்திட்டு அன்னதானம் நடத்துங்க' - போராட்டம் நடத்திய மக்கள்

post image

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதி நி.பஞ்சம்பட்டி கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2,500க்கு மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களும் 100க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.இங்கு 300 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கிறிஸ்துவ தேவாலயமும் இதன் அருகே அரசுக்குச் சொந்தமான காலி மைதானம் மற்றும் காளியம்மன், ராமர் கோயில்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்தக் கோயில்களுக்கு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டன. இந்த விழாவிற்கு அன்னதானம் வழங்குவதற்காக கிறிஸ்துவ தேவாலயம் அருகே உள்ள பொது மைதானத்தில் அன்னதானம் நடத்த முடிவு செய்யப்பட்டது.  இந்த மைதானத்தின் பெயரை பாஸ்கு மைதானம் என மாற்றக் கோரி கிறிஸ்தவ மக்கள் தரப்பில் முன்பிருந்தே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மைதானத்தில் அன்னதானம் வழங்குவதற்கு கடந்த வாரம் அனுமதி கேட்டு காவல் துறையினர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

திண்டுக்கல் கோயில் கும்பாபிஷேக விழா பொது மைதானத்தில் அன்னதானம் வழங்க எதிர்ப்பு

இதனையடுத்து, அரசுக்குச் சொந்தமான மைதானத்தில் அன்னதானம் வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பொது மைதானத்தை, பாஸ்கு மைதானம் என அழைப்பிதழில் அச்சடித்தால் அன்னதானம் வழங்கலாம் என கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதனை அப்பகுதியில் வசிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது இதை எதிர்த்து கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் கோவில் கும்பாபிஷேக விழா பொது மைதானத்தில் அன்னதானம் வழங்க எதிர்ப்பு

இந்நிலையில் நேற்று காலை விநாயகர் மற்றும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு பொது மைதானத்தில் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, உணவு சாப்பிட்டுச் சென்றனர்.

இந்நிலையில்  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சம்பட்டியை சேர்ந்த கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு அரசு வழங்கிய அடையாள அட்டைகளை ஒப்படைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  வருகை தந்தனர்.

திண்டுக்கல் கோவில் கும்பாபிஷேக விழா பொது மைதானத்தில் அன்னதானம் வழங்க எதிர்ப்பு

பின்னர் நுழைவாயில் முன்பு  மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்  மற்றும் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர்  பிரதீப் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

தென்காசி: "நான் பாட்டு கேட்கும் ரேடியோவை திருடிட்டாங்க" - ஆட்சியரிடம் 95 வயதான மூதாட்டி புகார்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி.இவர் தனிமையில் வசித்து வருவதால் பொழுதை போக்குகின்ற வகையில் ரூபாய் 700 கொடுத்து ரேடியோ ஒன்று வாங்கி அதன்... மேலும் பார்க்க

சாத்தூர்: 'தனியார் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்' - கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எதிர்க்கோட்டை, எட்டகாப்பட்டி ஊராட்சியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன."இப்பகுதியில் தனியார் கல்குவாரி ச... மேலும் பார்க்க

"திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது" -அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு பணி நியமனங்கள் ந... மேலும் பார்க்க

"விசாரணைக் குழு விசாரிக்க வரவில்லை" - தவெக சி.டி.ஆர். நிர்மல்குமார் பேட்டி!

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த ... மேலும் பார்க்க

``இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக, நம் முதல்வர் தமிழ்நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்’’ - உதயநிதி

ராணிப்பேட்டையில், இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். காணொளிக்காட்சி வாயிலாக புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காமராஜர் தங்கி இருந்த நினைவகம் சீரமைப்பு - திறந்து வைத்து பெருமிதப்பட்ட உதயநிதி!

ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ராணிப்பேட்டைக்கு வந்திருந்தார். ... மேலும் பார்க்க