தென்காசி: "நான் பாட்டு கேட்கும் ரேடியோவை திருடிட்டாங்க" - ஆட்சியரிடம் 95 வயதான ...
சாத்தூர்: 'தனியார் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்' - கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எதிர்க்கோட்டை, எட்டகாப்பட்டி ஊராட்சியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
"இப்பகுதியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல்குவாரியால் கிராமத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கல்குவாரிக்காக வெடி வைக்கும் போது கிராமத்தில் உள்ள வீடுகளில் பிரச்னை ஏற்படுகிறது.
இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருக்கிறோம்.
இந்தக் கல்குவாரிக்கு எனத் தனியான பாதை ஏதும் இல்லாததால் கிராமத்தின் பொதுப் பாதையைப் பயன்படுத்தி அதையும் சேதப்படுத்துகிறார்கள்" என இக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கல்குவாரிக்கு கருத்து கேட்பு கூட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கிராமத்திற்கே சம்பந்தமில்லாத வேறு ஊரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கல்குவாரி வேண்டுமெனக் கோரிக்கை வைக்க வைத்தார்கள். அதனால் கிராம மக்களுக்கும், அவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது.
அதேபோல் கிராம சபை கூட்டத்திலும் கல்குவாரிக்கு எதிராக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இக்குறைதீர் கூட்டத்தில் தனியார் கல்குவாரிக்கு வழங்க இருக்கும் உரிமத்தை ரத்து செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



















