``அரசுக்கெதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை" - CJI கவாய் ஓ...
ஆதாரங்களை கையில் வைத்து சுற்றிய குற்றவாளிகள் - கோவை மாணவி வழக்கில் வெளியான புதிய தகவல்
கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம், “கோவை விமான நிலையம் அருகே நடந்த பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் (30), கார்த்திக் (21) இருவரும் சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள். குணா (20) மதுரையைச் சேர்ந்தவர். இவர்கள் மீது பீளமேடு, கோவில்பாளையம், சிங்காநல்லூர், துடியலூர், காகாசாவடி, கிணத்துக்கடவு,

சூலூர், சத்தியமங்கலம், திருமுருகன் பூண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, வாகனத் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மூவருக்கும் திருமணம் ஆகவில்லை. இருகூர் பகுதியில் தங்கி, கிடைக்கின்ற பகுதிக்குச் சென்று வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக உடனடியாக 100க்கும் மேற்பட்ட காவலர்கள் விசாரணையில் இறங்கினார்கள். 300 சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. கோவில்பாளையத்தில் ஒரு வீட்டில் சாவியுடன் இருந்த இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு மூவரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் அவர்கள் மது அருந்திவிட்டு காரின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.

கையில் அரிவாள் வைத்திருந்தனர். அப்போது அவர்களிடம் அரிவாள் இருந்துள்ளது. அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டியிருப்பதால், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். மாணவி உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு உளவியல் சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் அடிக்கடி ரோந்து சென்றுள்ளனர். சம்பவத்தன்று அப்பகுதிக்குச் செல்லவில்லை. மூவரும் குற்ற சம்பவத்திற்கு பிறகு பல இடங்களுக்கு சென்றுள்ளனர். மாணவி புதர் அருகே இருந்ததாலும், பயங்கர இருட்டாக இருந்ததாலும் அவரை மீட்க தாமதம் ஆனது.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 3 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டது. அந்த நபர்கள் மாணவியின் செல்போன், மோதிரம் ஆகியவற்றை எடுத்தனர். செல்போன் நெட்வொர்க் மூலமும் அவர்களை டிராக் செய்தோம். சிசிடிவி, செல்போன் நெட்வொர்க், பழைய வழக்குகள் அடிப்படையில் கைது செய்துள்ளோம்.” என்றனர்.



















