செய்திகள் :

கோவை மாணவி பாலியல் வழக்கு: கொந்தளித்த பாஜக.. சூறையாடிய நாம் தமிழர்

post image

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,  “கோவை கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட போதை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கோவை
கோவை

இது தமிழகத்தின் தற்போதைய கேவலமான ஆட்சியை காண்பிக்கிறது. இது திராவிட மாடல் ஆட்சியல்ல. பெண்களுக்கு எதிரான பாலியல் மாடல் ஆட்சி இது. பெண்கள் நடமாட பாதுகாப்பு இல்லை. இதைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.” என்றார்.

சம்பவம் நடந்த இடத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நேரில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து கோவை தெற்கு தாலுகா ஆட்சியர் அலுவலகம் அருகே வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பெப்பர் ஸ்ப்ரே, தீப்பந்தம் ஏந்தி பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், திமுக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நயினார் நாகேந்திரன
பாஜக

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “காவல்துறை என்கவுன்டர் நடத்தி இந்த வழக்கை மூடி மறைக்கக் கூடாது. குற்றத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்.

காவல்துறையின் செயல்பாடுகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆட்சியாளர்களுக்கு டிராமா போட நேரம் உள்ளது. பெண்களை பாதுகாக்க மட்டும் நேரம் இல்லை. மாதம் ரூ.1,000 கொடுத்தால் பெண்கள் உங்கள் பக்கம் நிற்க மாட்டார்கள். எஞ்சியுள்ள 4 மாதங்களிலாவது பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.” என்றார்.

சட்டவிரோத பார்

இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் ஒரு சட்டவிரோத பார் இயங்கி வந்தது. அதை நாம் தமிழர் கட்சியினர் அடித்து நொறுக்கி, ஒருவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக மற்றும் தவெக சார்பிலும் போராட்டம் நடைபெறவுள்ளது.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: நள்ளிரவு கிடைத்த தகவல்; சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேர்; என்ன நடந்தது?

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. காரில் தன் நண்பருடன் அமர்ந்து பேசி வந்த மாணவிக்கு நடந்த கொடூரம் நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் - கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுமையா. இவருக்கு அலாவுதீன் என்ற கணவர் இருந்தார். டிரைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2024-ம் ஆண்டு மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக சுமையா காவல்நிலையத்த... மேலும் பார்க்க

மும்பையில் கைதான போலி விஞ்ஞானி; பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பா? - தீவிர விசாரணை

மும்பையில் கடந்த வாரம் அக்தர் உசைனி (60) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தன்னை மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுவதாக தெரிவித்துக் கொண்டார். அவரிடம் இதற்கான போலி அடையாள அட்டைய... மேலும் பார்க்க

கோவை: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் கொடுமை; திருடி விட்டு வரும் வழியில் 3 பேர் வெறிச்செயல்

கோவை ஒண்டிப்புதூர் அருகே வினித் என்கிற இளைஞர் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், தனியார் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் அந்த மாணவி, கோவை ... மேலும் பார்க்க

நூடுல்ஸ், பிஸ்கெட் பாக்கெட்களில் ரூ.42 கோடி மதிப்புள்ள கஞ்சா; தாய்லாந்திலிருந்து மும்பைக்கு கடத்தல்

மும்பைக்கு விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் மும்பை விமான நிலையத்தில் ரூ.47 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

லண்டன்: ``ரயிலில் பயணிகளுக்கு கத்திகுத்து; 8-வது நிமிடத்தில் கைது'' - சம்பவத்தை விளக்கும் காவல்துறை

இங்கிலாந்தின் டான்காஸ்டரில் இருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை மாலை 6:25 மணிக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. இரவு 7:42 மணிக்கு ரயிலில் இருந்தவர்கள் காவல்துறைக்கு அவசர அழைப்பு எண் மூல... மேலும் பார்க்க