செய்திகள் :

நீண்ட நாள்களாக ஆக்டிவாக இல்லாத கணக்குகள்; வட்டியுடன் பணம் பெறலாம் - RBI சொல்லும் ஈசி வழி!

post image

நீங்கள் ஆரம்பத்தில் தொடங்கிய வங்கிக் கணக்கு, மாணவப் பருவத்தின்போது தொடங்கிய வங்கிக் கணக்கு என உங்களுடைய ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு இப்போது ஆக்டிவாக இல்லாமல் இருக்கலாம். அதில் கொஞ்சம் பணம் இருக்கலாம்.

அந்தப் பணத்தை இப்போது எடுக்க முடியுமா? எடுக்க முடியுமானால், அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே பார்க்கலாம்.

இரண்டு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆக்டிவாக இல்லாத வங்கிக் கணக்குகள், 10 ஆண்டுகளுக்கு மேல் கோரப்படாமல் இருக்கும் வங்கி டெபாசிட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு (DEA) மாற்றிவிடும்.

அந்தப் பணத்தை நீங்கள் இப்போதும் தாராளமாகப் பெறலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தீர்களோ, அந்த வங்கியின் உங்களுடைய கிளை அல்லது ஏதேனும் ஒரு கிளைக்குச் செல்லுங்கள்.

அந்தக் கிளையில் உங்களுடைய ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் போன்ற ஏதேனும் ஒரு KYC ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள்.

வங்கி அந்த ஆவணங்களை சரிபார்த்த பின், உங்களுடைய பணம் உங்களுக்கு வட்டியுடன் கொடுக்கப்படும்.

இந்தப் பணத்தை யாரெல்லாம் கோரலாம்?

இந்தப் பணத்தை ஆவணத்தைக் கொடுத்து, நீங்களே சென்று பெறலாம்.

ஆக்டிவாக இல்லாத இறந்தவர்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை, அவர்களது நாமினிகள் கோரலாம்.

கோரப்படாத டெபாசிட்டுகள் பற்றி தெரிந்துகொள்ள...

இந்த டெபாசிட்டுகள் குறித்து உங்கள் வங்கியின் இணையதளம் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் UDGAM இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.

முகாம்களில் கூட...

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரை, இந்தியா முழுவதும் இந்தப் பணத்தை மக்கள் கோருவதற்கான சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கேகூட சென்று, உங்களது பணத்தை பெறுவதற்கான உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.

SBI கிரெடிட் கார்டுகளில் 'இந்தந்த' பேமென்டுகளுக்கு இனி தனிக் கட்டணம்; நாளை முதல் அமல்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தங்களது கிரெடிட் கார்டு கட்டணங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.கல்விக் கட்டணங்கள்... அதன் படி, மூன்றாம் தரப்பு ஆப்கள் அல்லது வலைதளங்களில் எஸ்.பி.ஐ கிரெடிட் கா... மேலும் பார்க்க

உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா? நாளை முதல் இது கட்டாயம்!

புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குபவர்களிடம் இருந்து வங்கிகள் கட்டாயம் நாமினி பெயரையும் பெற வேண்டும் என்கிற விதிமுறையைக் கொண்டு வந்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. ஏன்?வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் திடீரெ... மேலும் பார்க்க

வங்கியில் கடன் வாங்கியிருக்கிறீர்களா? உடனே பேசி வட்டியைக் குறைக்கலாம்! - எப்படி தெரியுமா?

இனி நீங்கள் கடன் வாங்கியிருக்கும் வங்கியிடம் பேசி, வட்டி விகிதத்தைக் குறைக்கலாம்.இது கொஞ்சம் ஆச்சரியமான செய்தியாக இருக்கலாம். இதுகுறித்து தெளிவாக விளக்குகிறார் நிதி நிபுணர் விஷ்ணுவர்தன்."இந்தியாவில் இ... மேலும் பார்க்க