ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள்...
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா? நாளை முதல் இது கட்டாயம்!
புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குபவர்களிடம் இருந்து வங்கிகள் கட்டாயம் நாமினி பெயரையும் பெற வேண்டும் என்கிற விதிமுறையைக் கொண்டு வந்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
ஏன்?
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் திடீரென்று இறந்துவிட்டால், அந்தக் கணக்கில் இருக்கும் பணத்தை யாரிடம் வழங்குவது என்பதில் குழப்பங்களும், சிக்கல்களும் எழுகிறது. இதை சரிசெய்யவே தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு டெபாசிட் கணக்குகள், லாக்கர்கள் ஆகியவற்றிருக்கும் பொருந்தும்.

நியமிக்க விருப்பமில்லையென்றால்...
ஒருவேளை வாடிக்கையாளர் நாமினியை நியமிக்க விருப்பம் காட்டவில்லை என்றால், அந்த நபரிடம் இருந்து வங்கிகள் எழுத்துப்பூர்வ கடிதத்தைப் பெற்றுகொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட அந்த வாடிக்கையாளர் எழுத்துப்பூர்வக் கடிதத்தையும் கொடுக்க மறுத்தால், அதையும் வங்கிகள் அவரது வங்கிக் கணக்கு திறக்கும் வங்கி ஆவணங்களில் குறிப்பிட்டு கொள்ளலாம்.
இந்தப் புதிய உத்தரவின் படி, வாடிக்கையாளர்கள் நான்கு நாமினிகள் வரை நியமித்துகொள்ளலாம். முதலாமவர் இறந்துபோகும் பட்சத்தில், அடுத்தவருக்கு வழங்கப்படும்... இதே நடைமுறை தான் அடுத்தடுத்து வாடிக்கையாளருக்கும் பின்பற்றப்படும்.
இந்த உத்தரவு நாளை (நவம்பர் 1) முதல் அமலாக உள்ளது.
நீங்கள் வங்கி கணக்கு தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டதா?
நீங்கள் வங்கிக் கணக்கு தொடங்கி பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இப்போது KYC அப்டேட்டின் போது, தவறாமல் நாமினிகளை நியமித்துகொள்ளுங்கள்.
இது தற்போதைய உத்தரவில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், உங்களது வங்கிக் கணக்கில் நாமினிகளை நியமித்து கொள்வது மிகவும் நல்லது... பாதுகாப்பானது.














.jpg)

