Aan Paavam Pollathathu Movie Review |Rio Raj, Malavika | Kalai | Siddhu Kumar |C...
பீகார்: ரூ.5 லட்சத்திற்கு இலவச சிகிச்சை டு 1 கோடி அரசு வேலைகள்- பாஜக கூட்டணி வாக்குறுதிகள் என்னென்ன?
வருகிற பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி. அதன் முக்கிய வாக்குறுதிகள் இதோ...
இளைஞர்கள்
இளைஞர்களுக்கு ஒரு கோடி அரசு வேலைகள் வழங்கப்படும்.
பெண்கள்
முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் நிதியுதவி வழங்கப்படும்.

கட்டமைப்பு
நான்கு சர்வதேச விமான நிலையங்கள் கட்டப்படும்.
வீடுதோறும் 125 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
பீகாரில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மெகா திறன் மையங்கள் உருவாக்கப்பட்டு, பீகார் உலக திறன் மையமாக மாற்றப்படும்.
உலக தரத்திலான செமி கண்டெக்டர் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்.
புதிதாக இலவச 50 லட்ச வீடுகள் கட்டி தரப்படும்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள், 10 புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும். குறைந்தபட்சம் 100 சிறு, குறு, நடுத்தர தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
மருத்துவம்
மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரையில் இலவச சிகிச்சைகள் வழங்கப்படும்.
உணவு மற்றும் விவசாயம்
இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும்.
ஒவ்வொரு பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டாயம் வழங்கப்படும்.
கர்பூரி தாக்கூர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், ரூ.3,000 வழங்கப்படும். இதன் மூலம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.6,000-ல் இருந்து ரூ.9,000 ஆக உயரும்.
மீனவர்களுக்கான உதவித் தொகை ரூ.4,500-ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்படும்.
விவசாயக் கட்டமைப்புகளில் ஒரு லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

கல்வி
ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
கல்வி நகரம் மற்றும் உலக தரத்திலான பல்கலைக்கழகங்களின் திறந்தவெளி வளாகங்கள் கட்டமைக்கப்படும்.
ஏழை, எளிய மாணவர்களுக்கு கே.ஜி முதல் முதுகலை வரை இலவச மற்றும் தரமான கல்வி வழங்கப்படும்.
பள்ளிகளில் மதிய உணவுடன் சத்துள்ள காலை உணவும் வழங்கப்படும்.
ஒவ்வொரு துணை பிரிவுகளிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி திறக்கப்படும்.
இந்த மாணவர்கள் தங்களது உயர் கல்வியைத் தொடர மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையில் நிதி உதவி வழங்கப்படும்.
ஆன்மீகம்
சீதை பிறந்த இடத்தில் 'சீதாப்புரம்' என்று உலக தரத்திலான ஆன்மீக நகரம் உருவாக்கப்படும்.
ராமாயணம், சமண, பௌத்த, கங்கை, விஷ்ணுபாத மற்றும் மகாபோதி வழித்தடங்கள் உருவாக்கப்படும்.














