`நீக்கப்பட்ட செங்கோட்டையன்' - எடப்பாடி வீட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசன...
தாம்பத்திய உறவின்போது பெண்கள் ஏன் பேசணும்னா? | காமத்துக்கு மரியாதை - 264
கணவனும் மனைவியும் உறவுகொள்கையில் பேச வேண்டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். பேசுவதால் என்ன பலன் என்றோம்.

''பல நேரங்களில் உறவின்போது, பெண்கள் தங்கள் கணவரிடம் பேசுவதே இல்லை. 'என்னைத் திருப்திப்படுத்த வேண்டியது கணவரோட வேலை. ஆனா, என்னை அங்க, இங்கன்னு தொடக்கூடாது. செக்ஸ் பண்றப்போ பேசுறதுக்கும் எனக்கு பிடிக்காது. கூச்சமா இருக்கும்' என்பார்கள். இத்தனைக் குழப்பமான மனநிலையில இருக்கிற பெண்களுக்கு உச்சக்கட்டம் கிடைக்காவிட்டால் கோபம் வரும். ஆனால், அந்தக் கோபத்தால் எந்தத் தீர்வும் கிடைக்காது என்பதே உண்மை. தீர்வு பேசுவதில்தான் இருக்கிறது.
'என் மனைவிக்கு பெண்ணுறுப்பைத் தொட்டா பிடிக்கல. ஆனா, உச்சக்கட்டமே வரலைன்னு சொல்றாங்க. நான் வேற என்னதான் பண்றது டாக்டர்'னு கேட்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

ஓர் ஆண், தன் மனைவியை உச்சக்கட்டம் அடைய வைக்க வேண்டுமென்றால், 14 நிமிடங்கள் விடாமல் தூண்ட வேண்டும். இது எங்கோ ஒரு கணவனுக்குத்தான் சாத்தியம். எல்லா ஆண்களாலும் இது முடியாது. அதற்குள் விந்து வந்துவிடும். அதனால், தனக்கு என்ன வேண்டும், எப்படி செய்தால் பிடிக்கிறது, எதை ரொம்ப விரும்புகிறேன் என்பதை ஒரு பெண் சொன்னால் மட்டுமே கணவனுக்குத் தெரியும்.
'செக்ஸ் வெச்சுக்கிறப்போ பேச சங்கடமா இருக்கு' என்று நினைக்கிற பெண்கள், அதற்கு முன்னரே 'குளிச்சிட்டு வாங்க; பல் தேய்ச்சிட்டு வாங்க; நான் இந்த டிரெஸ் போட்டுக்கவா' என்பதுபோல பேசலாம். இப்படிப் பேச, பேச ஒருகட்டத்தில் தாம்பத்திய உறவில் இது பிடித்திருக்கிறது, இது பிடிக்கவில்லை என்பதுபோல பேச ஆரம்பிக்கலாம்.
இப்போது நான் சொல்லியிருப்பதெல்லாம் எல்லோருக்கும் பொதுவானது. தாம்பத்திய உறவு தரும் உணர்வுகள், அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அது ப்யூர்லி பர்சனல். மருத்துவர்கள் நாங்கள் பொதுவாகச் சொல்கிற விஷயங்களும் சில உதவும் என்றாலும், உங்கள் கணவருக்கும் உங்களுக்குமான தனிப்பட்ட பேச்சுக்கள் என்று இருக்கும். அவற்றை உறவின்போது பேசுங்கள்...'' என்கிறார் டாக்டர் காமராஜ்.













