செய்திகள் :

Aarav Studios: ``இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகள்'' - தயாரிப்பாளராகும் பிக்பாஸ் பிரபலம்!

post image

பிக்பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று, தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவர் ஆரவ். இந்த ஆண்டு வெளியான அஜித் குமாரின் விடா முயற்சி, கலகத்தலைவன் போன்ற படங்களில் நெகட்டிவ் பாத்திரங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ளார்.

திரைப்படத் துறையில் தனது பயணத்தின் அடுத்த மைல் கல்லாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் ஆரவ்.

அஜித்துடன் ஆரவ்
அஜித்துடன் ஆரவ்

Aarav அறிக்கை

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும் எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதுடன், இந்த பெருமைமிகு அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாக என்னை மாற்றியுள்ளது.

இப்போது இந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “AARAV STUDIOS”-ன் தொடக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின் மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்து உருவானது. காட்சி மற்றும் படைப்பாற்றல் உலகில் இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆரவ் அறிக்கை

கடவுளின் அருளுடனும், திரைப்பட ரசிகர்களின் அன்புடனும், இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன் எங்களின் AARAV STUDIOS மூலம் இத்திரைப்படப் பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்," எனக் கூறியுள்ளார்.

மேலும் இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், "சில கனவுகள் திட்டமிடப்படுவதில்லை - அவை உள்ளுக்குள் அமைதியாக வளர்கின்றன,

ஒரு நாள், அவை வடிவம் பெறுகின்றன.

அந்த நாள் இங்கே." என எழுதியுள்ளார்.

ஆரவின் புதிய முயற்சிக்கு திரைத்துறையைச் சார்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகராக மட்டுமல்லாமல் கார், பைக் ஓட்டுவதிலும் ஆர்வம் காட்டி வந்த ஆரவ் தயாரிப்பாளரகாவும் புதிய அவதாரம் எடுத்திருப்பதை அவரது ரசிகர்கள் வரவேற்கின்றனர்.

Amaran: ஓராண்டை நிறைவு செய்த `அமரன்'; BTS புகைப்படங்களைப் பகிர்ந்த சாய் பல்லவி | Photo Album

'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமர... மேலும் பார்க்க

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Photo Album

சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் 'பைசன்' படத்தின் BTS புகைப்படங... மேலும் பார்க்க

ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?!

மதுரையைச் சேர்ந்த சிவா (ரியோ ஜார்ஜ்), சென்னையிலுள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவருக்கும் கோவையைச் சேர்ந்த சக்திக்கும் (மாளவிகா மனோஜ்), இருவீட்டார் சம்மதத்துடன் ஏற்பாட்டுத் திருமணம் நடக்கிற... மேலும் பார்க்க

'என் உயிரின் மெல்லிசையே' - காதலியைக் கரம்பிடித்த `டூரிஸ்ட் பேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

`டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.அப்படத்தின் வெற்றியைத்... மேலும் பார்க்க