செய்திகள் :

`நான் எந்தவித தவறும் செய்யவில்லை; திமுக-வை மிரட்டி பார்க்க.!’ - அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

post image

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று பெரும் மோசடி திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையின் புகாரை முன்வைத்து பரபரப்புக் குற்றச்சாட்டை கிளப்பி இருக்கிறார்.

இந்ந்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "அமலாக்கத்துறை சோதனை எங்களுக்கு சொந்தமான இடத்தில் நடந்தது. அந்த சோதனையின் பொழுது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அது குறித்து ஆய்வு செய்யுமாறு அமலாக்கத்துறை, தமிழக போலீஸாருக்கு தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் தமிழக போலீஸார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள். முறைகேடு நடந்ததா என்பதை போலீஸார் விசாரிப்பார்கள். ஆனால், நான் எந்தவித தவறும் செய்யவில்லை. தி.மு.க-வை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம். தி.மு.க-வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.

kn nehru

தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விசாரணையில் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம். அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஓ.பி.எஸ், தினகரன் உள்ளிட்டோரை தி.மு.க-வின் பி டீம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி, வாயில் வந்ததை பேசிக்கொண்டு வருகிறார்.

எஸ்.ஐ.ஆர் நேர்மையாக நடந்தால் சரியாக இருக்கும். ஆனால், வேண்டுமென்றே பல வாக்காளர்களை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், நீக்குவதையும் தான் எதிர்க்கிறோம்" என்றார்.

``இனவெறி பாகுபாட்டின் உச்சம்'' - மோடியின் பீகார் பிரசார பேச்சுக்கு சீமான் கண்டனம்

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதில், பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள... மேலும் பார்க்க

சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?

வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன.கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் ... மேலும் பார்க்க

``மொத்த விளக்கத்தையும் நாளை தருகிறேன்'' - அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டைய... மேலும் பார்க்க

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்; எடப்பாடி பழனிசாமி அதிரடி; காரணம் என்ன?

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்... மேலும் பார்க்க

தெலங்கானா அமைச்சராக அசாருதீன் பதவியேற்பு; `சமூக நீதியா? இடைத்தேர்தல் நகர்வா?' - பாஜக விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் கேப்டனுமான முகமது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.முன்னதாக, சூதாட்ட குற்றச்சாட்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (... மேலும் பார்க்க

``தாவூத் இப்ராஹிம் குறித்து நான் அப்படி பேசவில்லை'' - விமர்சனங்களுக்கு மம்தா குல்கர்னி விளக்கம்

மும்பை வெடிகுண்டு தாக்குதலை தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து நடத்தியதாக நம்பப்படுகிறது. இதனால் தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.ஒரு காலத்தில் பா... மேலும் பார்க்க