செய்திகள் :

"நான் என் கணவரை இறுதிவரை நின்று காப்பாற்றுவேன்" - ஸ்ருதி ரங்கராஜ் அறிக்கை

post image

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா விவகாரத்தை சமீபத்தில் மகளிர் ஆணையம் (Women's Commission) விசாரணை செய்திருந்தது.

இதுகுறித்து "ஜாய் கிரிஸில்டாவைக் காதலித்துத் திருமணம் செய்ததாகவும், குழந்தை தனக்குத்தான் சொந்தம். மாதம்பட்டி ரங்கராஜ் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்" என்ற தகவலை ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஜாய் கிறிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ்

இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் "ஜாய் என்னை மிரட்டியதால்தான் திருமணம் செய்து கொண்டேன்" என்றும் "அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும்" என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி பிரியா, "ஜாய் கிரிசில்டாவின் உண்மையான நோக்கம் - பணம் பறிப்பு மற்றும் சட்டபூர்வமான மனைவியான எனக்கான குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது" என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஸ்ருதி பிரியா ரங்கராஜ், "மார்ச் 2025-ல் நான் என் குடும்பப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது, ஏப்ரல் 2025-இலேயே ஜாய் கிரிசில்டாவிடமிருந்து ஒழுக்கமற்ற மற்றும் அவமதிப்பான செய்திகள் வந்தன.

நீதிமன்ற ரீதியாக பிரிந்ததாகக் கூறும் ஒருவர் இப்படிப்பட்ட செய்திகளை அனுப்புவது ஏன்? இதுவே அவருடைய இரட்டை முகத்தனத்தை வெளிக்கொணர்கிறது. அவர் ஊடகங்களைத் தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்திற்காக தவறாகப் பயன்படுத்தி, எங்கள் குடும்ப அமைதியைக் குலைக்க முயற்சி செய்வது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி பிரியா
ஸ்ருதி பிரியா

ஜாய் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய கடிதத்தில், எனது கணவர் திரு. ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது மற்றும் எங்களைப் பிரிப்பது தான் தனது நோக்கம் என்று வெளிப்படையாக கூறியிருப்பது பதிவாக உள்ளது.

அவர் ஊடகங்களில் அளித்த பேட்டிகளில் - "எனக்கு பணம், வீடு எதுவும் வேண்டாம்”, “நான் யாரையும் பிரிக்க விரும்பவில்லை" என்று கூறினாலும், அவருடைய சொந்த கையெழுத்தில் உள்ள கடிதமே அதற்கு நேர்மாறாக உண்மையை வெளிப்படுத்துகிறது.

அந்தக் 'affirmation'-ல் சில பகுதிகள்:

பிரிவு 4: "என் பொருளாதார தேவைகளை ரங்கராஜ் கவனிக்க வேண்டும்." பிரிவு 6: "ரங்கராஜ் என்னை தனது மனைவியாக சமூகம் முன் அறிமுகப்படுத்த வேண்டும்."

பிரிவு 8: "ரங்கராஜ் எனக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும்." மற்றும் "ரங்கராஜ் எனக்கு மாதம் ரூ.8,00,000 வழங்க வேண்டும்."

பிரிவு 9: "இப்போது எனக்கு ரூ.10,00,000 வேண்டும்."

பிரிவு 12: "ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும்."

இந்த வரிகளே ஜாய் கிரிசில்டாவின் உண்மையான நோக்கம் - பணம் பறிப்பு மற்றும் சட்டபூர்வமான மனைவியான எனக்கான குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது - என்பதை தெளிவாக காட்டுகின்றன.

நான் என் கணவர் திரு. ரங்கராஜ் அவர்களுடன் உறுதியாக நிற்கின்றேன்; அவரை இறுதி வரை காப்பாற்றுவேன்" என்று உறுதியாகக் கூறியிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி பிரியா.

BB Tamil 9: "எல்லாரும் சேர்ந்து என்னை அழ வச்சுட்டீங்க!"- கலங்கிய விக்ரம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

BB Tamil 9: ``உனக்கு மேனஸ் இல்லையா?'' - துஷாரிடம் மோதும் திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 31: திவ்யாவின் பதவியைத் தூக்கிய பிக் பாஸ்; முன்னேறிச்செல்லும் வியன்னா

பரவாயில்லை. மூழகப் போகும் கப்பல், மீட்கப்படுவதற்கான மெல்லிய அடையாளம் தெரிவது போல, ஹோட்டல் டாஸ்க் மூலம் இந்த எபிசோட் சற்று சுவாரசியமாக இருக்கிறது. இப்படியே பிக்அப் ஆனால் இந்த சீசன் பிழைக்கக்கூடிய சாத்த... மேலும் பார்க்க

BB Tamil 9: `இந்த டாஸ்க்கில கொடுக்கப்படும் ஸ்டார் எனக்கு வேணாம்' - திவ்யா சபரி மோதல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

BB Tamil 9: 'ரொம்ப கடுமையா நடந்துக்குறாங்க' - திவ்யாவை குற்றம் சாட்டும் ஹவுஸ் மேட்ஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

``ரங்கராஜ் சொல்றதை காமெடியா எடுத்துக்கலாம்" - மகளிர் ஆணைய தலைவர் குமாரி

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிறிசில்டா விவகாரம் இப்போதைக்கு ஓயாதுபோல.'தன்னைத் திருமணம் செய்துவிட்டு தற்போது சேர்ந்து வாழ மறுக்கிறார்' என ஏற்கெனவே திருமணமான ரங்கராஜ் மீது அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர... மேலும் பார்க்க