செய்திகள் :

சிகரெட்: புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

post image

எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது. புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை.

குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன் மோனாக்ஸைட், தார், நிக்கோடின், நைட்ரிக் ஆக்ஸைட், பாதரசம் போன்றவையாகும். சிகரெட், பீடி பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று சென்னையைச் சேர்ந்த இதய மருத்துவர் ஆர்.ரவிக்குமாரிடம் கேட்டோம்.

புகை பிடிப்பதை நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
புகை பிடிப்பதை நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

''சிகரெட் பழக்கத்தை விட்ட, உடனே ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு மேம்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, புகைப்பதை விட்ட 20-வது நிமிடத்தில் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் நார்மல் நிலைக்கு வந்துவிடுகிறது.

* புகை பிடிப்பதைவிட்ட 8 மணி நேரத்தில், ரத்தத்தில் உள்ள நிக்கோடின் மற்றும் கார்பன் மோனாக்ஸைடு அளவு பாதியாக குறைந்துவிடும். ஆக்ஸிஜன் அளவு நார்மலுக்கு வந்து விடும்.

* 24 மணி நேரத்தில் ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு முற்றிலும் வெளியேறி விடும்.

புகை பிடிப்பதை நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
புகை பிடிப்பதை நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

* 48 மணி நேரத்தில் உடலில் உள்ள நிக்கோடின் முற்றிலும் வெளியேறி விடும்.

* 72 மணி நேரத்தில் சுவாசம் சீராகி விடும். உடலில் ஆற்றல் அதிகரித்துவிடும்.

* 2 முதல் 12 வாரங்களில் ரத்த ஓட்டம் மேம்பட்டிருக்கும்.

* ஆறுமாத காலத்துக்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று பாதிப்பு போன்றவை குறைகிறது.

* இப்படியே தொடர்ந்தால், புகை பழக்கம் இருக்கிற ஆண், பெண் இருவருக்குமே குழந்தை பிறப்புக்கான ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இப்படி ஏராளமான நன்மைகள் புகைப் பழக்கத்தை விட்ட நேரத்திலிருந்து தொடங்கி விடுகிறது'' என்கிறார் டாக்டர் ஆர்.ரவிக்குமார்.

புகை பிடிப்பதை நிறுத்த முடிவெடுத்து விட்டீர்கள்தானே?

Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 46. கடந்த சில மாதங்களாக கழுத்து வலி அதிகமாக இருக்கிறது. பெயின் கில்லர் போட்டும் பலன் இல்லை. இந்நிலையில், தலையணை வைத்துப் படுப்பதுதான்கழுத்துவலிக்குக் காரணம் என்றும், அதைத் தவி... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரெக்னன்சி கிட் வாங்கி டெஸ்ட் செய்து பார்க்கிறேன்; இது எந்த அளவுக்கு துல்லியமானது?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றன. பீரியட்ஸ் தள்ளிப்போகும்போதெல்லாம் பிரெகன்சிகிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்க்கிறேன். இது எந்த அளவுக்குத் துல்லியமானது, தவறான ரிசல்ட் க... மேலும் பார்க்க

தண்ணீரை முறைப்படி காய்ச்சிக் குடிப்பது எப்படி?

மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது. வீட்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஆப்பிளை தோலுடன் கொடுக்கலாமா? அதனால் பாதிப்பு வருமா?

Doctor Vikatan:குழந்தைகளுக்கு ஆப்பிள் கொடுக்கும்போது தோலுடன் கொடுப்பது சரியா, ஏனெனில் இப்போது வரும் ஆப்பிள்கள் மெழுகு பூச்சுடன் வருகின்றன. அதனால்ஏதேனும் பாதிப்பு வருமா,எந்தெந்தப் பழங்களை குழந்தைகளுக்க... மேலும் பார்க்க

பெருங்குடலை அலசி நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கலாமா?

வயிற்றைச் சுத்தப்படுத்த உண்ணாநோன்பு இருப்பதும், மூலிகைக் கஷாயம் குடிப்பதும், விளக்கெண்ணெய் குடிப்பதும் அல்லது எனிமா எடுத்துக்கொள்வதும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்த பழக்கங்கள். இதனால் உடலில் உள்ள த... மேலும் பார்க்க

தூங்கப் போகுமுன் செல்போன் திரையைப் பார்க்கிறீர்களா? - எச்சரிக்கும் புதிய ஆய்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க