செய்திகள் :

பிரண்டைக்கீரை முதல் பசலைக்கீரை வரை - மருத்துவர் கு.சிவராமன் சொல்லும் தகவல்கள்!

post image

''கீரை, பசிக்கான சாப்பாடு மட்டும் இல்லை. இது வைட்டமின் சத்துக்களைத் தருகிற டானிக்'' என்கிற சித்த மருத்துவர் கு. சிவராமன், இங்கே சில கீரைகள் நமக்கு தருகிற ஆரோக்கியத்தைப் பற்றி சொல்கிறார்.

கீரைகளின் மருத்துவ பலன்கள்!
கீரைகளின் மருத்துவ பலன்கள்!

வீசிங் இருக்கிறவங்களுக்கான கீரை இது. இதை பருப்புக் கடைசலாக, ரசமாக, துவையலாக எப்படி வேணாலும் சாப்பிடலாம். முள்ளை நீக்கிட்டு எல்லாக் கீரையும் மாதிரி சமைக்க வேண்டியதுதான்.

நெஞ்சுல சளி ரொம்ப அதிகமா இருந்து, 'கள் கள்’ சத்தத்தோட இருமலும் சேர்ந்து வந்தா, கரிசலாங்கண்ணிக் கீரையை சாறு எடுத்து, சம பங்கா நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, நீர் வத்திப்போறவரைக்கும் விட்டு எடுத்துக்கணும்.

தொடர்ந்து அஞ்சு நாளைக்கு ரெண்டு வேளை, இந்தக் கீரைத்தைலத்தை ஒரு ஸ்பூன் கொடுத்தாலே, சளி போயிடும். முடி கறுப்பா வளர உதவுறதும், கல்லீரலைப் பாதுகாக்கிறதும் இந்தக் கீரைதான்.

பிரண்டைக்கீரை
பிரண்டைக்கீரை

பிரண்டைக் கீரையை உப்பு, புளி, வர மிளகாய் சேர்த்துத் துவையலா அரைச்சு சாப்பிட்டா, எலும்பு நல்ல உறுதியா இருக்கும். வயித்துல வர்ற குடற்புண்ணை ஆத்திடும். பிள்ளைகளுக்கு வயிறு மந்தமா இருந்தா, இந்த கீரை சமைச்சுக் குடுக்கலாம். நல்லா பசியைத் தூண்ட வைக்கும்.

'புள்ளத்தாச்சிக்குன்னே இருக்கு பசலைக் கீரை. லேசா கால் வீக்கம் இருந்தா, பருப்பு சேர்த்து சமைச்சுக் குடுக்கலாம். வீக்கம் போயிடும்.

பசலை மாதிரியே, சிறுநீரகக் கல்லைப் போக்க, காசினிக் கீரை இருக்கு. இந்தக் கீரையை சமைச்சு சாப்பிட்டா, சிறுநீரகக் கல்லும் படிப்படியா கரைஞ்சிடும்.

பசலைக்கீரை
பசலைக்கீரை

அகத்திக் கீரையை மாசத்துக்கு ரெண்டு முறை சாப்பிடுறது அக உறுப்புகளுக்கு நல்லது. அகச் சூட்டை குறைக்கிறதாலதான், இதுக்கு ’அகத்தி’னு பேர் வந்ததாம். ஆனா, சித்த மருந்து எடுக்கறப்ப, இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது.'

இந்தக் கீரையை சாப்பிடறவங்க உடம்பு தகதகனு பொன் மாதிரி மின்னும். 'போன கண்ணும் திரும்புமாம் பொன்னாங்கண்ணியால’னு ஒரு வழக்கு மொழியும் இருக்கு.

முருங்கைக் கீரை
முருங்கைக் கீரை

வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி கீரை, ஆரோக்கியமில்லாத, மந்தமான பிள்ளைக்கு முருங்கைக் கீரை, உடல்சூடுக்கு தண்டுக்கீரை, அஜீரணத்துக்கு கொத்துமல்லி/புதினா கீரை, மூட்டுவலிக்கு முடக்கறுத்தான், சர்க்கரை நோய்க்கு வெந்தயக் கீரைனு எல்லாக் கீரையுமே உணவுக்கு பக்கபலமாவும், நோய் வராமல் தடுக்கிற மருந்தாவும் இருக்கு.

ரெண்டு வயசு வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கு நார் உள்ள கீரைகளைக் கொடுக்க கூடாது. செரிமானத்துக்கு நல்லது இல்லை.

சிறு கீரை, அரைக்கீரையை நல்லா கடைஞ்சு சாதத்துல பிசைஞ்சு குடுக்கலாம். கீரைகளை பொரியைல் செய்றதை விட, கடைசல், பாசிப்பருப்பு போட்ட கூட்டு செஞ்சு சாப்பிடறது நல்லது.

அகத்திக் கீரையை நல்லா வேக வைக்கணும். ஆனா, முருங்கைக் கீரையை குழைவா வேக வைக்கக் கூடாது.

சிறுநீரகச் செயலிழப்பு இருக்கிறவங்க மட்டும், கீரையை நிறைய தண்ணீர் சேர்த்து வேகவைச்சு, வடிச்சு அந்த தண்ணீரைக் கொட்டிட்டு, அதுக்கப்புறம் அந்தக் கீரையை சமைச்சு சாப்பிடலாம்.

அதுல இருக்கிற உப்புக்கள் போயிடும். கீரையோட தயிர் சேர்த்தோ, மீன் சேர்த்தோ சாப்பிடக் கூடாது. ராத்திரியில் கட்டாயம் கீரை சாப்பிடக் கூடாதுனு உணவு விதியே இருக்கு.

Doctor Vikatan: கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம்; கவலைக்குரியதா, தானாகச் சரியாகுமா?

Doctor Vikatan: வயதான என் அம்மாவுக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரத்த அழுத்தம் நார்மலாகவேஇருக்கிறது. இந்த வீக்கத்துக்கு வேறு என்ன காரணமாகஇருக்கும். தானாகச் சரியாகிவிடும் என விடலாமா, ... மேலும் பார்க்க

சிகரெட்: புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது. புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 46. கடந்த சில மாதங்களாக கழுத்து வலி அதிகமாக இருக்கிறது. பெயின் கில்லர் போட்டும் பலன் இல்லை. இந்நிலையில், தலையணை வைத்துப் படுப்பதுதான்கழுத்துவலிக்குக் காரணம் என்றும், அதைத் தவி... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரெக்னன்சி கிட் வாங்கி டெஸ்ட் செய்து பார்க்கிறேன்; இது எந்த அளவுக்கு துல்லியமானது?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றன. பீரியட்ஸ் தள்ளிப்போகும்போதெல்லாம் பிரெகன்சிகிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்க்கிறேன். இது எந்த அளவுக்குத் துல்லியமானது, தவறான ரிசல்ட் க... மேலும் பார்க்க

தண்ணீரை முறைப்படி காய்ச்சிக் குடிப்பது எப்படி?

மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது. வீட்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஆப்பிளை தோலுடன் கொடுக்கலாமா? அதனால் பாதிப்பு வருமா?

Doctor Vikatan:குழந்தைகளுக்கு ஆப்பிள் கொடுக்கும்போது தோலுடன் கொடுப்பது சரியா, ஏனெனில் இப்போது வரும் ஆப்பிள்கள் மெழுகு பூச்சுடன் வருகின்றன. அதனால்ஏதேனும் பாதிப்பு வருமா,எந்தெந்தப் பழங்களை குழந்தைகளுக்க... மேலும் பார்க்க