இன்று தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை?; திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு வி...
Ronaldo: ``மெஸ்ஸி என்னை விட சிறந்தவரா?'' - ரொனால்டோவின் பதில்
கால்பந்து உலகில் அணையாமல் எரியும் 'மெஸ்ஸியா, ரொனால்டோவா யார் உண்மையான GOAT?' விவாதத்துக்கு எண்ணெய் ஊற்றியிருக்கிறார் அல்-நசீர் அணியின் நட்சத்திரம் ரொனால்டோ.
மெஸ்ஸி தன்னை விட சிறந்த வீரர் என்பதைத் தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என உறுதியாக அவர் கூறிய கருத்து இணையதளவாசிகளை விவாதத்தில் இறக்கியுள்ளது.

பியர்ஸ் மோர்கனுக்கு அவர் அளித்த நேர்காணலை அவரது வாழ்க்கையிலேயே பர்சனலான நேர்காணலாக விளம்பரப்படுத்தி புரோமோ வெளியிட்டுள்ளனர். முழு வீடியோ வெளியாகும் முன்னரே அந்த புரோமோவில் ரொனால்டோ கூறிய அந்தக் கருத்து வைரலாகியிருக்கிறது.
Ronaldo சொன்னதென்ன?
நீண்டகாலமாக வெளிப்படையாக பேசப்படாமல் ஆனால் ரொனால்டோவைப் பின்தொடர்ந்து வந்த கேள்வியான மெஸ்ஸி உங்களை விடச் சிறந்த வீரரா? என்ற கேள்விக்கு "மெஸ்ஸி என்னை விட சிறந்தவரா? அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் பணிவாக இருக்க விரும்பவில்லை." என அவர் பதிலளிப்பதாக புரோமோ அமைந்துள்ளது.
ரொனால்டோ தனது முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் வெய்ன் ரூனி ஒரு காலத்தில் மெஸ்ஸியை "எப்போதும் சிறந்தவர்" என்று அழைத்ததற்கு பதிலளித்தார். ரூனியின் கருத்தைப் பற்றி தனக்குக் கவலை இல்லை எனக் கூறியுள்ளார்.











