BB Tamil 9: `இந்த டாஸ்க்கில கொடுக்கப்படும் ஸ்டார் எனக்கு வேணாம்' - திவ்யா சபரி ம...
இன்று தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை?; திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்கிற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை?
அதன் படி, இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
இந்த இடங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
திருப்பத்தூர் தொடர் மழை பெய்து வருவதால், அந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வரை மழை இருக்கும்.

















