மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
Rain Updates: தமிழ்நாட்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வானிலை எப்படி இருக்கும்? வானிலை மையம் தகவல்
பெரும்பாலும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் நவம்பர் மாதத்தின் இறுதியிலும், டிசம்பர் மாதத்திலும் மழை அதிகமாக இருக்கும். இதனால், ஒவ்வொரு ஆண்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த இரு மாத மழை குறித்த சின்ன அச்சம் இருக்கும்.
கடந்த மாதத்தில் (அக்டோபர், 2025), தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது.
இதனால், அடுத்த இரண்டு மாதங்கள் எப்படி இருக்கும் என்கிற கேள்வி மக்களிடம் இருந்து வருகிறது.
இந்தக் கேள்விக்குப் பதில் தருவதுபோல, நேற்று (அக்டோபர் 31), இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பர் மாதம் வானிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி
"இந்த நவம்பர் மாதம், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை சராசரியாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் மற்ற பகுதிகளில் சராசரி மற்றும் சராசரிக்கும் மேல் மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு இந்தியாவில் லா நினா நிலை இருந்து வருகிறது. இது இன்னமும் தொடரும் என்பதால் அடுத்தடுத்த மாதங்களில் இந்தியாவில் அதிக குளிர் இருக்காது.
வடகிழக்கு பருவ மழையின் போதும், லா நினா தொடரும் என்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் குறைந்த அளவிலான மழை பெய்யவே வாய்ப்புகள் இருக்கின்றன".





















