செய்திகள் :

'மோன்தா' புயல் உருவாகியது; சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; வேறு எந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்?

post image

'மோன்தா' புயல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம்.

அதன் படி,

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று மோன்தா புயலாக மாறியுள்ளது.

இந்தப் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இது மேற்கே, வடமேற்கே நகர்ந்து நாளை காலை கடும் புயலாக வலுப்பெறும்.

இதையடுத்து, நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் காக்கிநாடா - மசிலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும்.

மழை
மழை
நேற்றைய சென்னை வானிலை மையத்தின்‌ அறிக்கை படி,

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம்.

நாளை...

திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Rain Alert: சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்; எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் - முழு விவரம்

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.தற்போது மோன்தா புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.நேற்றைய இந்திய வானிலை அறிக்கை படி,இன்று தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வர... மேலும் பார்க்க

Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும்? வானிலை அறிக்கை விவரம் | Live Update

தமிழ்நாட்டில் அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில... மேலும் பார்க்க

Rain Updates: வங்கக்கடலில் உருவாகிறது 'Montha' புயல் - சென்னையில் மழை எப்படி இருக்கும்?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் 26 ஆம் தேதி ஆழ்ந்தக் காற்... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர் திறப்பு; காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதுமாக உபரிநீராக வ... மேலும் பார்க்க

Rain Updates: வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - புயலாக வலுபெறுமா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், நீலகிரி, ஈரோடு, வேலூர், திருப்பத்த... மேலும் பார்க்க