Weekly Horoscope: வார ராசி பலன் 26.10.25 முதல் 1.11.25 | Indha Vaara Rasi Palan ...
Rain Alert: சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்; எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தற்போது மோன்தா புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய இந்திய வானிலை அறிக்கை படி,
இன்று தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யலாம்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி,
இன்று சென்னை, திருவள்ளூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம். இந்த மழையின் அளவு 115.6 - 204.4 மி.மீக்குள் இருக்கும்.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இங்கே 64.5 - 115.5 மி.மீ வரை மழை பெய்யலாம்.
நாளை திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டைக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 25, 2025

















