செய்திகள் :

சிட்டி யூனியன் வங்கி - டிஜிட்டல் பேமென்ட் உலகில் ஒரு புதுமை!

post image

1904ல் தொடங்கிய சிட்டி யூனியன் வங்கி, தற்போது 120 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்து வருகிறது. கும்பகோணத்தில் தலைமையகத்துடன் 890-க்கும் மேற்பட்ட கிளைகள், 1700-க்கும் மேற்பட்ட ATM/BNAs மூலம் நாடு முழுவதும் செயல்படுகிறது.

வாய்ஸ்-அடிப்படையிலான மொபைல் பேங்கிங், வாய்ஸ் 'UPI123Pay', டிஜிட்டல் கடன் வசதி, மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பங்கள் போன்ற பல புதுமைகளில் முன்னணியில் இருக்கும் இவ்வங்கி, “புதுமை வழி நம்பிக்கை” என்ற கொள்கையை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

சிட்டி யூனியன் வங்கி
சிட்டி யூனியன் வங்கி

டிஜிட்டல் வங்கி உலகில் முன்னேறும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய முயற்சிகள், இந்தியாவின் நிதி சேவை துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன.

மும்பையில் அக்டோபர் 7 முதல் 9 வரை நடைபெற்ற Global FinTech Fest (GFF) 2025 நிகழ்ச்சியில், சிட்டி யூனியன் வங்கி (CUB) தனது பல புதிய டிஜிட்டல் பேமென்ட் தீர்வுகளை அறிமுகப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்திய கட்டண கவுன்சில் (PCI), தேசிய கட்டண கழகம் (NPCI) மற்றும் ஃபின்டெக் கன்வர்ஜென்ஸ் கவுன்சில் (FCC) ஆகியவை இணைந்து நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து இருந்தது. “வாடிக்கையாளர்களுக்கு வசதி, பாதுகாப்பு மற்றும் எளிதான பண பரிமாற்றம்” என்பதே இதன் முக்கிய நோக்கம்.

இந்த புதிய சேவைகள் இந்தியாவின் National Payments Corporation of India (NPCI) மற்றும் பல தொழில்நுட்ப பங்குதாரர்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை நாடெங்கிலும் பண பரிவர்த்தனைகளை மேலும் அதிகரிக்கவும், கட்டண செயல்முறைகளை எளிமைப்படுத்தி வாடிக்கையாளர் சேவைகளை பாதுகாப்புடன் மேம்படுத்தவும் உதவுகின்றன. டிஜிட்டல் இந்தியா நோக்கத்தில் இது ஒரு பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

அறிமுகமான புதிய டிஜிட்டல் தயாரிப்புகள்:

1.⁠ ⁠UPI Circle – My Devices:

ஸ்மார்ட் டிவி போன்ற IoT சாதனங்கள் மூலம் UPI பரிவர்த்தனைகளைச் செய்யும் வசதி. கைபேசி இல்லாமலேயே பாதுகாப்பான முறையில் சுலபமான பணப்பரிமாற்றம்.

2.⁠ ⁠UPI Reserve Pay (Single Block Multiple Debit):

வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்காக ஒரு தொகையை தற்காலிகமாக பிளாக் (block) செய்து தேவையான போது அந்த தொகையில் இருந்து தவணைத் தொகைகளை கழிக்க அனுமதிக்கும் வசதி.

சிட்டி யூனியன் வங்கி
சிட்டி யூனியன் வங்கி

3.⁠ ⁠UPI Help – AI மூலம் இயக்கப்படும் Chatbot:

வாடிக்கையாளர்களுக்கு 24x7 உதவி வழங்கும் வகையில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (Machine Learning) திறன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள உதவியாளர் மூலம் UPI தொடர்பான கேள்விகள், புகார்கள் அனைத்துக்கும் விரைவான பதில்.

4.⁠ ⁠Multisignatory Workflow through UPI:

நிறுவனங்கள் மற்றும் கூட்டு கணக்காளர்களுக்கான புதிய தீர்வு. ஒரு பரிவர்த்தனைக்கு பலரின் ஒப்புதல் தேவைப்படும்போது, அதனை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக செயல்படுத்தும் முறை.

5.⁠ ⁠UPI மூலம் Micro ATM-ல் பணம் எடுப்பு:

QR குறியீடு மூலம் UPI வழியாக பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியை வழங்குவதுடன் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கூட, நிதி உட்புகுத்தலை வலுப்படுத்துகிறது.

6.⁠ ⁠UPIக்கு கூடுதல் அங்கீகார முறைகள் – BioAuth அறிமுகம்:

பொதுவாக UPI பரிவர்த்தனைகள் வாடிக்கையாளர்களின் PIN மூலம் அங்கீகரிக்கப்படுகின்றன. இப்போது, PIN-க்கு மாற்றாக உயிர்முறை அங்கீகாரம் (Biometric Authentication) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது மற்றும் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

7.⁠ ⁠Face Auth – முகம் அடையாளம் வழி PIN Reset:

முக அங்கீகாரத்தை (Face Authentication) PIN-க்கு மாற்றாக பயன்படுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான PIN Reset அனுபவத்தை வழங்குகிறது.

8.⁠ ⁠மியூச்சுவல் ஃபண்ட் மீது கடன் (புதிய வாடிக்கையாளர்களுக்கு):

முன்பாக வங்கியின் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட Digital Loan Against Mutual Funds இப்போது புதிய வாடிக்கையாளர்களுக்கும் (New to Bank Customers) கிடைக்கிறது.

சிட்டி யூனியன் வங்கி
சிட்டி யூனியன் வங்கி

9.⁠ ⁠CUB Desire - புதிய வாடிக்கையாளர்களுக்காக:

CUB மற்றும் CUB அல்லாத வாடிக்கையாளர்களுக்கும் CUB DESIRE எனும் திட்டமிடப்பட்ட சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எளிதாக சேமித்து, கனவுகளையும் எதிர்கால திட்டங்களையும் நிறைவேற்ற உதவுகிறது.

10.⁠ ⁠CUB Depend – Credit Line on UPI:

CUB DEPEND என்பது வாடிக்கையாளர்களின் FD ஆதாரத்தை பயன்படுத்தி, UPI வழியாக உடனடி, பாதுகாப்பான டிஜிட்டல் கடன் வரம்பை வழங்கும் சேவை.

11.⁠ ⁠CUB RuPay MSME Card:

இந்தியாவின் முதல் AI-செயலாக்கப்பட்ட கிரெடிட் கார்டு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

Instagram: உங்க நண்பர்கள் எங்க இருக்காங்கன்ன தெரிஞ்சுக்கலாம் - இன்ஸ்டாவின் இந்த அப்டேட் தெரியுமா?

உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் ஆப்பில் தற்போது பல்வேறு புதிய அப்டேட்கள் வந்துள்ளன. முதல் முக்கிய மாற்றம் ரீல்ஸ் வீடியோக்களின் நீளம் 3 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பயன... மேலும் பார்க்க

AI குக்கிங் அசிஸ்டன்ட்: `சமையல் ரெடி!' - நெட்டில் சமையல், தட்டில் சாப்பாடு!

' ஏங்க நான் சமையல் செய்றேன். கொஞ்சம் காய்கறி மட்டும் நறுக்கி கொடுத்துருங்க'என்கிற பேச்சுக்கே இனிமே இடமே இல்லை. நீ 50, நான் 50 என்று இல்லாமல் 100% சமையலையும் AI யே பார்த்துக்கொள்ளும் என்று சொன்னால் உங்... மேலும் பார்க்க

`Accenture' CTO கார்த்திக் நாராயண் கூகுள் தலைமை பொறுப்பில் நியமனம்; சுந்தர் பிச்சை வாழ்த்து

புதிதாக, கூகுள் கிளவுட் பிரிவில் தலைமை நிலை தயாரிப்பு மற்றும் வணிக அதிகாரியாக கார்த்திக் நரேன் நியமிக்கப்பட்டுள்ளார்.கூகிள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் கூறியதாவது:“இன்று நாம் கார்த்திக் நரேனை கூகுள் கி... மேலும் பார்க்க

Gita-GPt: கடவுளிடமே பேசுவதாக நம்பும் மக்கள்; இது எப்படி ஆன்மிக அறிவுரைகளை வழங்குகிறது?

தொழில்நுட்ப வளர்ச்சியில் சாட் ஜிபிடியின் பங்கு அதிகமாக உள்ளது. கல்வி, அறிவியல் தாண்டி தற்போது ஆன்மிக தளத்துக்கும் புதுமைப் போக்கை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு உதாரணமாக இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப... மேலும் பார்க்க

'சென்னை அரவிந்த் ஶ்ரீனிவாஸ் முதல் திண்டுக்கல் மகரிஷி வரை' - டெக் உலகை ஆளும் தமிழர்கள் லிஸ்ட்

தமிழ்நாட்டைச் சேர்ந்த டெக்கீஸ் பலரும் டெக் உலகில் பெரும் சாதனைகளைச் சத்தமில்லாமல் நிகழ்த்தி வருகின்றனர். 'Perplexity AI, Comet AI Browser'களை அறிமுகப்படுத்தி AI உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும... மேலும் பார்க்க

Sundar Pichai: "தென்னிந்திய ரயில் பயணம்; 'AI hub' மிகப்பெரிய முதலீடு" - சுந்தர் பிச்சை சொன்ன விஷயம்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, கூகுளின் 'Google AI hub data centre'ஐ ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பெரிய அளவில் கட்டமைக்க... மேலும் பார்க்க