ஐஸ்லாந்திலும் குடியேறிய கொசு; இதுவரை இல்லாமல் இருந்ததற்கு காரணம் என்ன? இப்போது ...
Instagram: உங்க நண்பர்கள் எங்க இருக்காங்கன்ன தெரிஞ்சுக்கலாம் - இன்ஸ்டாவின் இந்த அப்டேட் தெரியுமா?
உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் ஆப்பில் தற்போது பல்வேறு புதிய அப்டேட்கள் வந்துள்ளன. முதல் முக்கிய மாற்றம் ரீல்ஸ் வீடியோக்களின் நீளம் 3 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பயனர்கள் தங்களுடைய வீடியோக்களை நீளமாக அப்லோட் செய்யமுடியும்.
மேலும் "Watch History" எனும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியால் பயனர்கள் அவர்கள் முன்னர் பார்த்த ரீல்ஸ் வீடியோக்களை எளிதாக திரும்ப பார்வையிட முடிகிறது.
அடுத்து, இன்ஸ்டாகிராம் தனது AI தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. புதிய AI வசதிகள் மூலம், வீடியோக்களில் மொழிபெயர்ப்பு செய்ய முடியும்.
புதிய UI மாற்றங்களுடன், "Friends Map" என்ற அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இது நண்பர்களின் இருப்பிடத்தை காண உதவுகிறது. உங்கள் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை நிகழ்நேரத்தில் பார்க்கவும், சந்திப்பதற்கான இடங்களை பகிரவும் உதவுகிறது. இந்த அம்சம் ஸ்னாப்சாட்டில் உள்ள "ஸ்னாப் வரைபடம்" போன்றது.
மேலும் "Friends Reels" என்ற தனி அம்சம் மூலம் நண்பர்கள் பார்த்து ரியாக்ட் செய்த ரீல்ஸ் வீடியோக்களை ஒன்றாக பார்க்க முடியும். “Add Yours” ஸ்டிக்கர் என்ற ஒரு அப்டேட்டும் இன்ஸ்டாகிராமில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒரு பயனர் ஒரு தலைப்பைக் கொடுத்து, "Add Yours" ஸ்டிக்கர் என்று பதிவிட்டால்,(உதாரணமாக, "இன்றைய காலைச் சூரியனைப் பகிரவும்" என்று பதிவிட்டால்)மற்ற பயனர்கள் அந்த ஸ்டிக்கரைத் தட்டி, தங்கள் சொந்த புகைப்படம் அல்லது வீடியோவை பதிவிடலாம்.
இந்த புதிய அப்டேட்கள் சமூக வலைதளங்களை மேலும் பயனுள்ளதாகவும் மாற்ற உதவுகின்றன.




















