மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
SIR Row : 'கொளத்தூரில்19476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்’ - BJP ஏ.என்.எஸ் பிரசாத் | களம் 03
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
தவறுக்கு இடமில்லை
போலி வாக்காளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக தமிழக அரசு தேர்தல் கமிஷனின் எஸ் ஐ ஆர் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் நோக்கத்துடன் தேர்தல் கமிஷன், பிரதமர் மோடி மீது தொடர்ந்து ஆதாரம் இல்லாத கற்பனை கதைகளை சொல்லி அவதூறு பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் தொடங்குவதாக அறிவித்துள்ள வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் எதிர்காலத்தில், மக்களின் எண்ணங்களுக்கு மாறாக தேர்தல் வெற்றிகளை தலைகீழாக மாற்றி ஜனநாயக படுகொலை செய்யும் போலி வாக்காளர்களை கண்டறிந்து, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுடன், வாக்களிக்க தகுந்த வாக்காளர்களை அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் இணைப்பது தான் எஸ் ஐ ஆர் ஆய்வு நடைமுறை. இந்த தமிழகத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தம் மிகப்பெரிய வெற்றியடைய அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு துணை நிற்க வேண்டும்.
எஸ்.ஐ.ஆர் மூலம் வெற்றி பெறலாம் என பா.ஜ.க - அ.தி.மு.க கணக்கு போடுகிறது என்றும் தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளை தி.மு.க.வினரும் தோழமைக் கட்சியினரும்தான் காக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் கூறியது அரசியல் உள்நோக்கம் கொண்ட கற்பனையான, அவதூறு குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு எதிரானது.
தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு இந்திய தேர்தல் கமிஷனின் எண்ணத்தை எஸ் ஐ ஆர் செயல்பாட்டை முழுவதுமாக அமல்படுத்தக்கூடிய தமிழக அரசு அதிகாரிகள், மாநில அரசின் அனைத்து துறை நிர்வாகத்தினர் உரிய முறையில் செயல்படுவதற்கு தமிழக முதல்வர் உற்சாகப்படுத்தி அறிவுரை கூறுவதை விட்டுவிட்டு, தன்னுடைய அரசின் அதிகாரிகளை நம்பாமல், தன்னுடைய அரசு அதிகாரிகளே அவமரியாதை செய்வது போல், தி.மு.க.வினரும் தோழமைக் கட்சியினரும்தான் மட்டும்தான் காக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தேர்தல் கமிஷன் மீது திட்டமிட்ட விஷமத்தன பிரச்சாரம் செய்வது தவறானது.

ஜனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் உள்ள தேர்தல் கமிஷன் செயல்படுத்த உள்ள எஸ் ஐ ஆர் வாக்காளர் பட்டியல் திருத்தல் ஆய்வின் போது, தமிழகத்தின் அனைத்து கட்சிகளின் சார்ந்த தேர்தல் கமிஷனர் அங்கீகரிக்கப்பட்ட (BLA-2 ) பூத் லெவல் ஏஜென்ட் –2 தேர்தல் கமிஷனுடன் இணைந்து செயல்பட்டு, வாக்காளர் சரிபாத்தலில் குறைகள் ஏதேனும் இருந்தால் தேர்தல் கமிஷனர் விண்ணப்பித்து தீர்க்கக் கூடிய நடைமுறையை உருவாக்கியுள்ளது. இதில் தவறுக்கு இடமில்லை என்பதுதான் உண்மை.
ஜனநாயக முறைகளுக்கு வலுவூட்டும்
தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி எஸ் ஐ ஆர் நடைமுறை என்பது கட்சி பேதம் இல்லாமல், வாக்களிக்கும் மக்களை வீடு வீடாக சென்று, நேரடியாக சந்தித்து ஆய்வு செய்து கண்டறிந்து வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படி போலி வாக்காளர்கள் இல்லாமல் தயாரித்து வரைவு பட்டியல் வெளியிட்டு, அதன் பிறகு பொதுமக்களின் கருத்துக்களை, ஆட்சேபங்களை ஆய்வு செய்து இறுதி வாக்காளர் பட்டியலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்ற எஸ்.ஐ.ஆர்., நடக்க உள்ளது. வரும், 4ல் துவங்கி டிச.,4 வரை தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி எஸ்.ஐ.ஆர்., ஆய்வின் போது தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த, தேர்தல் கமிஷன் வேலைக்காக அனுப்பப்பட்டுள்ள பூத் லெவல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவத்தை கொடுப்பர். அதை நிரப்பி பொதுமக்கள் திருப்பி தர வேண்டும். டிச.,9ல் வரைவு வாக்காளர் பட்டியல், பிப்.,7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, மிக எளிமையான தெளிவான செயல்பாட்டை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது
தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ தொடங்குவதால், தேர்தல் ஜனநாயக முறைகளுக்கு வலுவூட்டும் வகையில் போலி வாக்காளர்களை முழுவதுமாக கண்டறிந்து நீக்க 6 முக்கிய அம்சங்களை வாக்காளர் பட்டியலை மேம்படுத்த தீவிரமாக தேர்தல் கமிஷன் அமல்படுத்தி வருகிறது.

(1)வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயர்கள் முழுமையாக நீக்கப்படும்.
(2.) இரண்டு தொகுதிகளில் பெயர் இருந்தால், அதில் ஒரு தொகுதியின் பெயர் நீக்கப்படும்.
(3) ஒரு வாக்காளர் எங்கு குடியிருக்கிறாரோ, அந்த சட்டசபை தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில்தான் அவரது பெயர் இருக்க வேண்டும். மாறாக சொந்த ஊரில், அவரது பெயர் இருந்தால் அது நீக்கப்படும். எனவே சென்னை உள்பட நகரங்களில் வசிப்பவர்கள் தங்களது பெயரை சொந்த ஊரில் இருந்து நீக்கி வசிக்கும் இடத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நிலை உருவாகும்.
(4) வேறு தொகுதி அல்லது வேறு மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து கொள்ளவேண்டும்.
(5) தமிழகத்தில் வேலை பார்க்கும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் நிரந்தரமாக நீண்ட காலம் குடியிருந்து வாழும் பட்சத்தில், தங்கள் மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்து தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கதவுகள் இந்திய அரசியல் சாசன சட்டப்படி திறக்கப்பட்டுள்ளது.
(6) அதேசமயம் தமிழகத்தில் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்ந்து இருந்தால் நீக்கப்படுவார்கள். பீகார், வங்காளதேசம் எல்லையை ஒட்டி இருப்பதால் ஏராளமான வங்காளதேசத்தினர் சட்டத்திற்கு புறம்பாக வாக்காளர் பட்டியலில் இருந்தனர். அதனால் அவர்கள் பெயர்கள் ‘எஸ்.ஐ.ஆர்.’ மூலம் தற்போது நீக்கப்பட்டு உள்ளது.
பீகாரில் 65 லட்சம் பேர் நீக்கம்
அதேபோன்று மேற்கு வங்காளத்திலும் இதே நடைமுறையை பின்பற்றி சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய வங்காளதேசத்தினர், மேற்கு வங்காளத்தின் வாக்காளர் பட்டியல் இடம் பெற்றிருந்ததை கண்டறிந்து இது எஸ் ஐ ஆர் நடைமுறையை பின்பற்றி தேர்தல் கமிஷன் நீக்கி வருகிறது.
பீகாரில் ‘எஸ்.ஐ.ஆர்.’ நடத்தப்பட்டதன் மூலம் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அதில் 35 லட்சம் பேர் பீகாரை விட்டு வெளியேறியவர்கள். 22 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள். 7 லட்சம் பேர் 2 இடங்களில் பட்டியலில் பெயர் இருந்தவர்கள். ஒரு லட்சம் பேரை அடையாளம் காண முடியவில்லை என்று தேர்தல் கமிஷன் கூறியது. அதில் இடமாற்றம் செய்ததாக சொல்லி நீக்கப்பட்ட 35 லட்சம் பேர்
நம்முடைய அண்டை நாடான வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள்.
உண்மை இவ்வாறு இருக்க, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் என்ற பெயரில், திமுக கூட்டணியில் இடம்பெற்ற மக்கள் விரோத கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி திட்டம் இருப்பதாக சந்தேகப்படுகிறோம் பீகாரில் இஸ்லாமியர்கள் பட்டியல் சமூகத்தினர் பெண்கள் என்று குறி வைத்து இந்த நீக்கம் நடந்தது இன்று உண்மைக்கு புறம்பாக ஆதாரமில்லாத மதவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் தூண்டி, தேர்தல் அரசியலுக்காக தேசவிரோத கருத்துக்களை, இந்திய அரசியல் சாசனப்படி தன்னாட்சி பெற்று சுயமாக இயங்கும் தேர்தல் கமிஷன் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் சட்டவிரோதமானது.
தற்போது புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள திரு சூரியகாந்த், சட்டசபை தேர்தல் வரவிருக்கும் பீகாரில், தேர்தல் கமிஷன் பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (BIHAR SIR) அமல்படுத்திய பொழுது வாக்காளர் பட்டியலை தீவிரமாக திருத்துவது தொடர்பான வழக்கை விசாரித்தபோது, பீகாரின் வயது வந்தோரின் எண்ணிக்கையை விட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 107% அதிகமாக இருந்தது என்பதைக் கண்டறிந்தார்
நீதிபதி சூர்ய காந்த் தீர்ப்பு
இதுகுறித்து நீதிபதி சூர்ய காந்த் தன்னுடைய தீர்ப்பில் தேர்தல் ஆணைய நடவடிக்கை "நியாயமானது" என்றும், "சரியாகச் செய்ய வேண்டிய பிரச்னை" என்றும் குறிப்பிட்டார். கடந்த ஜூலை மாதம், வாக்காளர் பட்டியலை எண்ணுவதற்கு ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையைத் தொடர்ந்து பரிசீலிக்கலாம் என்றும், இதில் ஏதேனும் சட்டவிரோதம் இருந்தால் நீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்யலாம் என்றும் அவரது அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை அளித்தது.
மேலும் பீகாரில் அறிமுகம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உண்மையான வாக்காளர்களை அடையாளம் கண்டு, வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்து, போலி வாக்கு வாக்காளர்களை நீக்குவதற்கான முன் முயற்சியாக அமைந்த அமைந்துள்ளது. தமிழகத்தில் இந்த பணி நவம்பர் டிசம்பரில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும்,திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் மிகவும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் பதட்டத்திலும் பயத்திலும் தீவிர பொய் பிரச்சாரம் திமுக கூட்டணி கட்சியினரால் செய்யப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி முதல் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள போலி வாக்காளர்கள் களையப்பட்டு தேர்தல் கமிஷன் துணிவான சிறந்த முயற்சியில் டிச.9ல் உண்மை வாக்காளர்களைக் கொண்ட வரைவு பட்டியல் வெளியிட உள்ளது. திமுக, காங்கிரஸ் , உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின், போலி வாக்காளர் சதி திட்டம், பொய் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டு வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியையும் தமிழகத்திற்கு வளர்ச்சியும் அளிக்கின்ற வகையில் ஆட்சி மாற்றம் உருவாகும்.
தமிழக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ் ஐ ஆர்) நவ.4ல் தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரை நடக்கும் என்கிற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வருகின்ற நவம்பர் 2ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதி; 19,476 வாக்காளர்கள்
வாக்கு பறிப்பை தடுப்போம். வாக்கு திருட்டை முறியடிப்போம். தேர்தல் கமிஷனின் ஜனநாயக படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தான் போட்டியிட்டு வென்ற கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருப்பதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் கூறிய குற்றச்சாட்டுக்கு இதுவரை நேரடியாக பதில் அளிக்காதது ஏன்?
2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்கான வாக்காளர் தரவு பகுப்பாய்வில் கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரிய வாக்காளர்களாக கருதப்படுகின்றனர். 4,370 இரட்டை வாக்காளர் பதிவுகளும், போலி முகவரியுடன் 9,133 வாக்காளர்களும் உள்ளனர்.
முதல்வரின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி விவகாரம் குறித்து, விசாரணை நடத்தி, தீர்வு கான வேண்டும் என்று பாஜக சார்பாகவும், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்காளராகவும் இந்திய தேர்தல் ஆணையத்தில் நான் அளித்த புகார் கடிதம் குறித்து தேர்தல் கமிஷன் தற்போது முழு விசாரணை செய்து வருகிறது. இதுபோன்று சென்னை தி .நகர் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் திமுக சேர்த்துள்ள போலி வாக்காளர்களை தேர்தல் கமிஷன் நீக்கி விடுமோ? என்ற அச்சம் திமுகவினருக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை இலக்கை 30% இருந்து 40% ஆக உயர்த்தி, 68,000 வாக்குச்சாவடிகளில் 2.5 கோடி சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் களத்தில் நமக்கான பணிகள் முடிவடையவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி? என்றும் தமிழகத்தில் வாக்காளர் சேர்ப்பு குறித்து பேசிய பேச்சுக்கள் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அவதூறு பரப்புவதின் உள்நோக்கம்
போலி வாக்காளர்களை லட்சக்கணக்கில் சேர்த்து மக்கள் விரோத திமுக கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க கூடாது என்று தமிழக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ் ஐ ஆர் ) நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்த அறிவிப்புக்கு தமிழக மக்கள் மட்டுமின்றி திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைத்து கட்சிகள் சமுதாய இயக்கங்கள், குடியிருப்போர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் மிகப்பெரிய வரவேற்பையும் ஆதரவையும் அளித்துள்ளன.
திமுக சேர்த்துள்ள இரண்டரை கோடி புதிய வாக்காளர்களில் உள்ள போலி வாக்காளர்களை கண்டுபிடிக்க, தேர்தல் கமிஷன் எடுக்கும் முயற்சிகளை தடுக்கும் வகையில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடத்திய அவசர கூட்டத்தில் தேர்தல் கமிஷனுக்கு கண்டனத்தையும் பாஜக மீது அவதூறு பிரச்சாரத்தையும் துவக்கி உள்ளன.
இந்தியாவில் இதுபோன்று எட்டு எஸ் ஐ ஆர் இதுவரை நடைமுறைப்படுத்தியுள்ளது. மறைந்த திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் துவங்கி ஆண்டாண்டு காலமாக நடக்கும் தேர்தல் ஆணையத்தின் வழக்கமான வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி (SIR) நடைமுறையை ஏதோ புதிய முறை போல காட்சிப்படுத்தி அவதூறு பரப்புவதின் உள்நோக்கம் என்ன?

2017-ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலின் போது, போலி வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்ததை வசதியாக மறந்து விட்டு பாஜக மீதும் தேர்தல் கமிஷன் மீதும் குற்றம் சுமத்துவது ஏன்? தமிழகம் முழுவதும் திமுக சேர்த்துள்ள போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு விடுவார்களா என்ற அச்சத்தின் காரணமா? தேர்தல் கமிஷன் அறிவிப்பைக் கண்டு ஏன் பதட்டத்துடன் பயப்படுகிறார் என்று தமிழக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கேட்டுள்ள கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அளிக்க வேண்டும்.
மக்கள் மகத்தான ஆதரவு
தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பிரச்சாரம் செய்து வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் , இந்திய தேர்தல் கமிஷனர் பீகாரில் அறிமுகம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மக்களுக்கு நம்பிக்கையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களுடைய வெற்றி பெற்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து, வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதை அவசர அவசரமாக தேர்தல் கமிஷன் செய்யக்கூடாது என்று நல்லவர்கள் போல் ஒருபுறம் நீலி கண்ணீர் வடிக்கிறார்கள்.
மறுபுறம் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற பெரும் பணிகளை செய்வது சிரமம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் இதன் மூலம் தமிழக மக்களின் வாக்குரிமை படிக்கும் சதி திட்டம் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம் இன்று திட்டமிட்டு தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாட்டி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.
பீகாரில் நடந்து முடிந்த எஸ் ஐ ஆர் செயல்பாட்டிற்கு மக்கள் மகத்தான ஆதரவில் அளித்துள்ளதையும், இதுகுறித்து வாய் கிழிய பேசும் எதிர்கட்சியினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, எந்த ஆதாரமும் அளிக்கவில்லை என்பதும், ஒரு மேல்முறையீடு கூட யாராலும் செய்யப்படவில்லை என்கிற உண்மையை அறிந்து உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஏதோ சதி நடைபெறுகிறது என்று ஆதாரம் இல்லாமல் வாய்க்கு வந்தபடி பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எஸ் ஐ ஆர் அமல்படுத்தப்படுவதை கடுமையாக எதிர்ப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றி வரும் "இண்டி" கூட்டணி கட்சியினரின் கீழ்த்தரமான அவதூறு பிரச்சாரத்திற்கு துணை போக கூடாது. போலி வாக்காளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக தமிழக அரசு தேர்தல் கமிஷனின் எஸ் ஐ ஆர் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


















