ஆப்கானுடன் கைகுலுக்கும் இந்தியா; பாகிஸ்தானுடன் குலாவும் அமெரிக்கா! - மாறும் கூட்...
மெலிசா: `நூற்றாண்டின் புயல்’ 174 ஆண்டுகளுக்குபின் ஜமைக்காவை தாக்கிய கடும் புயல்; அதிர்ச்சி காட்சிகள்
ஜமைக்கா நாட்டில் நேற்று கடுமையான சூறாவளி புயல் வீசியது. இந்தப் புயலுக்கு பெயர் மெலிசா.
ஜமைக்கா நாட்டில் கடந்த 174 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தப் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புயல் குறித்த முக்கிய விவரங்கள் இங்கே...
நேற்று 300 கி.மீ வேகத்தில் நகர்ந்த மெலிசா புயல், ஜமைக்கா மற்றும் அதன் சுற்றியுள்ள தீவுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், அங்கு பெரும் மழை மற்றும் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.








இந்தப் புயலினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ஆனால், இப்போதைக்கு இந்தப் புயலினால் ஜமைக்காவில் 3 பேர், ஹைட்டியில் 3 பேர் மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருவர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
'மெலிசாவின் தாக்கத்தைத் தாங்கும் அளவிற்கான கட்டமைப்பு ஜமைகாவில் இல்லை' என்று அந்த நாட்டில் பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸே நேற்று அறிவித்தார். இதையடுத்து, அந்த நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் மிக வேகமாக நடந்தது... நடந்து வருகிறது.
மெலிசா புயலுக்கு 5-ம் வகை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஐந்தாம் வகை புயல் எச்சரிக்கை என்றால், அந்தப் புயலினான் வீட்டின் மேற்கூரைகளுக்கு பாதிப்புகள் ஏற்படலாம்... வீட்டின் சுவர்கள் இடிந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. மேலும், மின்சார துண்டிப்புகள் நாள் கணக்கில் தொடங்கி மாதக் கணக்கு வரை நீடிக்கலாம்.
இந்த மெலிசா புயல் கடந்த 21-ம் தேதி, மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைகளில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
— Usain St. Leo Bolt (@usainbolt) October 27, 2025
Keep Safe Jamaica
— Usain St. Leo Bolt (@usainbolt) October 28, 2025
— Usain St. Leo Bolt (@usainbolt) October 28, 2025
— Usain St. Leo Bolt (@usainbolt) October 29, 2025
மெலிசா புயல் 1.5 மில்லியன் ஜமைக்கா மக்களைப் பாதிக்கலாம் என்று செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.
இந்தப் புயலினால் ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட் இந்தப் புயல் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்தப் புயலை 'நூற்றாண்டின் புயல்' என்று எச்சரித்துள்ளது உலக வானிலை அமைப்பு.


















