செய்திகள் :

``கரும்பு விவசாயிகளிடம் வசூலித்த பணத்தை என்ன செய்தீர்கள்?'' - சரத்பவாருக்கு பட்னாவிஸ் கேள்வி

post image

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்படுகிறது. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் மாவட்டங்களில் கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதற்கான ஆராய்ச்சியில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் புதிய ரக கரும்பு ரகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இதன் தலைவராக சரத்பவார் இருக்கிறார். துணை முதல்வர் அஜித்பவாரும் இதில் அறங்காவலராக இருக்கிறார்.

இந்நிறுவனம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிடம் ஒரு டன் கரும்புக்கு ஒரு ரூபாய் வசூலித்து வருகிறது. அந்த ஒரு ரூபாய்க்கு இப்போது மாநில அரசு முதல் முறையாக கணக்கு கேட்க ஆரம்பித்துள்ளது.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

இந்த சர்க்கரை ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடு குறித்து மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநில சர்க்கரை கமிஷனர், வசந்த்தாதா சர்க்கரை ஆராய்ச்சி மையத்தில் வசூலிக்கப்படும் தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து தணிக்கை செய்ய கமிஷன் அமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டி இருக்கிறது.

இது குறித்து சரத்பவாரின் பேரன் ரோஹித் பவார் கூறுகையில், ''1975-ம் ஆண்டு கரும்பு விவசாயிகளுக்காகவும், கரும்பு கூட்டுறவு சொசைட்டிகளுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட வசந்த்தாதா சர்க்கை ஆராய்ச்சி மையத்தை மாநில அரசு களங்கப்படுத்தி இருக்கிறது. இது பா.ஜ.கவின் கீழ்த்தரமான அரசியலை காட்டுகிறது.

முதல்வரின் செயல் வழக்கமான ஒன்றாக தெரியவில்லை. இதற்கு முன்பு தானேயை குறி வைத்தார்கள். இப்போது பாராமதியை குறிவைத்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அரசின் ஊழலுக்கு எதிரான சாட்சியங்களை கொடுக்கும்போது அரசு அமைதியாகிவிடுகிறது'' என்று குறிப்பிட்டார்.

ரோஹித் பவார்
ரோஹித் பவார்

ஆனால் விசாரணை நடத்த உத்தரவிடவில்லை என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "அந்நிறுவனத்திற்கு எதிராக எந்த புகாரும் வரவில்லை. ஆனால் அப்படி புகார் வந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படலாம். சர்க்கரை ஆலைகளிடமிருந்து ஒரு டன்னுக்கு ஒரு ரூபாய் வசூலித்து அதனை என்ன செய்தீர்கள் என்று மட்டும் விளக்கம் கேட்டுள்ளோம்''என்று தெரிவித்தார்.

சர்க்கரை கமிஷனர் சஞ்சய் கோல்தே கூறுகையில், ''வசந்த்தாதா சர்க்கரை ஆராய்ச்சி மையத்திற்கு எதிராக எந்த புகாரும் வரவில்லை. ஆனால் அமைச்சரவையின் வேண்டுகோளின்படி சர்க்கரை ஆலைகளிடம் வசூலிக்கும் பணத்தை எப்படி செலவு செய்கிறார்கள் என்பது குறித்து தணிக்கை செய்ய கமிட்டியை அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டு இருக்கிறேன்'' என்றார்.

ஆப்கானுடன் கைகுலுக்கும் இந்தியா; பாகிஸ்தானுடன் குலாவும் அமெரிக்கா! - மாறும் கூட்டணி கணக்குகள்!

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் பிபிசி உலகசேவை ஆசிரியர், லண்டன்கட்டு... மேலும் பார்க்க

சிவகாசி: "சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணியில் பல கோடி ரூபாய் ஊழல்" - ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், "... மேலும் பார்க்க

TVK Vijay: "ஒரு அரசியல் தலைவர் மக்களைச் சந்திக்க முடியாத சூழல்" - அரசை விமர்சிக்கும் தமிழிசை

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு அரசியல் மோதல்களுக்கு நடுவில், கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விச... மேலும் பார்க்க

``அசாமில் SIR நடத்தாத நிலையில், தமிழ்நாடு, கேரளா-வில் மட்டும் ஏன் நடத்த வேண்டும்?'' - ஜோதிமணி எம்.பி

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்... மேலும் பார்க்க

மை சிந்தியதால் அடித்த தலைமை ஆசிரியர்; 20 நாள்களாக சிறுமிக்கு சிகிச்சை; செல்வபெருந்தகை கண்டனம்

சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பேனா மை சிந்தியதற்காக ஐந்தாம் வகுப்பு சிறுமி ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலையில் அடித்துள்ளார். இதனால் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அந்தச் சிறுமி கட... மேலும் பார்க்க

ஓரங்கட்டப்படும் முக்கிய நிர்வாகி?கல்விப் புள்ளிக்கு பொறுப்பு - TVKவின் புதிய நிர்வாகக் குழு பட்டியல்

கரூர் சம்பவத்துக்கு பிறகு செயல்படாமல் முழுமையாக முடங்கியிருந்த விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் நிர்வகிக்க 28 நிர்வாகிகள் அடங்கிய ... மேலும் பார்க்க