போலி ஈனோ தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் கைது - வெளியான அதிர்ச்சித் தகவல்
திண்டுக்கல்: கல்லூரி மாணவி பரிதாப மரணம்; கருவை கலைக்க நாட்டு மருந்து குடித்தாரா? - போலீசார் விசாரணை
திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, கடந்த 24-ஆம் தேதி வயிற்று வலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
"17 வயது கல்லூரி மாணவி கர்ப்பமாக இருந்ததால், நாட்டு மருந்து மூலம் கருவை கலைக்க முயற்சி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்" என்று கூறுகின்றனர்.
தீவிர சிகிச்சையளித்து வந்த நிலையில், நேற்று அந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இது குறித்து வடமதுரை போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி, கர்ப்பத்துக்கு யார் காரணம்? கருவை கலைக்க நாட்டு மருந்து வாங்கி கொடுத்து உதவி செய்தது யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


















