டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
Ukraine: உக்ரைனில் நீல நிறத்தில் மாறிய நாய்கள்; அதிர்ச்சியில் மக்கள்; காரணம் என்ன?
உக்ரைனின் செர்னோபில் நாய்கள் நீல நிறமாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உக்ரைனின் செர்னோபில் என்ற பகுதியில் அணு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. 1986ம் ஆண்டு அங்கு மிக மோசமான ஒரு அணு கசிவு விபத்து ஏற்பட்டது.
அந்த சமயத்தில் பலர் உயிரிழந்திருந்தனர். அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.

தங்கள் உடைமைகள் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு வெளியேறினர். குறிப்பாக மக்கள் செல்லப் பிராணிகளாக வளர்த்த நாய்களை அப்பகுதியில் அப்படியே விட்டுச் சென்றிருக்கின்றனர்.
தடைசெய்யப்பட்டிருக்கும் அந்தப் பகுதியில் மட்டும் தற்போது சுமார் 700 நாய்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது.
30 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வந்த நாய்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு, ‘டாக்ஸ் ஆப் செர்னோபில்’ எனும் அமைப்பின் துணை நிறுவனமான ‘கிளீன் பியூச்சர்ஸ் பண்டு’, நாய்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள நாய்களுக்கு உணவு வைப்பதற்காக அந்த நிறுவனத்தினர் அங்கு சென்றிருக்கின்றனர்.
அப்போது அங்குள்ள நாய்கள் திடீரென நீல நிறத்தில் மாறியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. நிறம் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
கதிர்வீச்சால் ஏற்பட்ட மரபணு பிறழ்வால் இந்த நிறமாற்றம் ஏற்பட்டிருக்குமோ? என்று மருத்துவர்கள் பரிசோதனையை மேற்கொண்டிருக்கின்றனர்.
நீல நிறத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, தேவைப்பட்டால் சிகிச்சை அளிப்பதே தற்போதுள்ள முதன்மையான நோக்கம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
















