டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
700 மரங்களுடன் ஜாக்கி ஷெராஃப் பண்ணை வீடு: ஏரி முதல் திறந்த தியேட்டர் வரை சுவாரஸ்ய ரகசியங்கள்!
பாலிவுட் நடிகர்கள் அனைவருக்கும் மும்பைக்கு வெளியில் பண்ணை வீடுகள் உள்ளன. ஷாருக் கானுக்கு மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக்கில் பண்ணை வீடு உள்ளது. சல்மான் கானுக்கு மும்பை அருகில் பன்வெல் என்ற இடத்தில் பிரம்மாண்ட பண்ணை வீடு உள்ளது.
சில நடிகர்களுக்கு புனே அருகில் உள்ள மலைநகரமான லோனவாலாவில் பண்ணை வீடுகள் உள்ளன. இதில் நடிகர் ஜாக்கி ஷெராஃப்க்கு புனே அருகில் பண்ணை வீடு உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நாள்களில் தனது நேரத்தை பெரும்பாலும் பண்ணை வீட்டில்தான் கழிக்கிறார்.
ஜாக்கி ஷெராஃப் முதல் முறையாக இயக்குநர் பாரா கானின் 'Fun With Farah Khan' என்ற நிகழ்ச்சிக்காக தனது பண்ணை வீட்டை இயக்குநர் பாரா கானுக்கு ஜாக்கி ஷெராஃப் சுற்றிக் காட்டினார்.

பாரா கான் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமானவர்களின் வீடு, சமையலறை, பண்ணை வீடுகளுக்கு தனது சமையல்காரர் திலிப்புடன் சென்று பார்வையிட்டு சமூக வலைத்தளம் மற்றும் யூடியூப்பில் பதிவிடுகிறார்.
இதேபோன்று ஜாக்கி ஷெராஃப் வீட்டிற்கும் விஜயம் செய்து இருந்தார். அவர் ஒவ்வொரு பகுதியையும் தனது சமையல்காரர் திலிப்புடன் பார்த்து ரசித்தார்.
ஜாக்கி ஷெராஃப் பண்ணை வீடு 44,000 சதுர அடியில் 700 மரங்களுடன் பசுமையாக காட்சியளிக்கிறது. பசுமை பண்ணை வீடாக காட்சியளிக்கும் அங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு சிறிய ஏரி உள்ளது.
அதில் வாத்துகள் சுதந்திரமாக நீச்சல் அடித்து விளையாடுகின்றன. ஜாக்கி ஷெராஃப் பொழுதுபோக்கிற்கு இந்த ஏரியில் மீன் பிடித்து, அவரே சமையல் செய்து சாப்பிடுகிறார். இது தவிர பண்ணை வீட்டில் கோழிகளும், முயல்களும் காணப்பட்டன.
அதோடு ஜாக்கி ஷெராஃப் தனக்காக பிரத்யேக நீச்சல் குளமும் கட்டி இருக்கிறார். ரோஜா, மல்பெர்ரி உள்ளிட்ட அனைத்து வகையான செடிகளும் மரங்களும் பண்ணை வீட்டை ஆக்கிரமித்து இருந்தன. தனியாக திறந்த வெளி தியேட்டர் ஒன்றும் இருந்தது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் நினைவாக கடம்பு மரம் ஒன்றையும் நட்டு வளர்த்து வருகிறார். அந்த மரத்தை ஜாக்கி ஷெராஃப் இயக்குநர் பாரா கானிடம் அறிமுகம் செய்து, இந்து மதத்தில் இந்த மரம் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டது என்று எடுத்துரைத்தார்.
அவற்றை சுட்டிக்காட்டிவிட்டு ‘டைட்டானிக்’ ஸ்பாட்டிற்கும் இருவரையும் ஜாக்கி ஷெராஃப் அழைத்து சென்றார். மேலிருந்து ஜாக்கி ஷெராஃப் தான் செய்யும் விவசாயமும் இயற்கைக் காட்சிகளையும் விவரித்தார். அதன் பிறகு அவர் தனது சமையலறைக்கும் அழைத்து சென்று காட்டினார்.
















