டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
போலி ஈனோ தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் கைது - வெளியான அதிர்ச்சித் தகவல்
டெல்லியில் போலி ஈனோ தயாரிக்கும் தொழிற்சாலையை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையில் 91,000-க்கும் மேற்பட்ட போலி ஈனோ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தீப் ஜெயின் மற்றும் ஜிதேந்தர் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியின் இப்ராஹிம்பூர் பகுதியில் போலி அமிலநீக்கி (antacid) தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருவதாக டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ஈனோவின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட 91,000-க்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், நிறுவன முத்திரையுடன் கூடிய ரோல்கள், ஸ்டிக்கர்கள், மற்றும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தயாரிக்கப்படும் போலியான தயாரிப்புகளை உட்கொள்வதால் வயிற்றில் எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பு, ஒவ்வாமை ஆகியவை ஏற்படக்கூடும்.
இதுபோன்ற போலி தயாரிப்புகள் எந்தவித தரப் பரிசோதனையும் இல்லாமல் தயாரிக்கப்படுவதால், அவற்றுக்கு மருத்துவ அங்கீகாரம் இருக்காது. எனவே பொதுமக்கள் பொருட்களை வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
















