செய்திகள் :

ராணுவ அதிகாரி வேஷம்: `பாலியல் வன்கொடுமை செய்ய நாடகம்' - போலீஸில் சிக்கிய இளைஞர்

post image

பெண் மருத்துவருடன் பழக இராணுவ அதிகாரி போல வேடமிட்ட டெலிவரி முகவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் உள்ள சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரவ் மாலிக் (27). இவர் தனியார் வணிக நிறுவனத்தில் டெலிவரி முகவராக பணியாற்றி வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் டெல்லியின் முன்னணி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவருடன் பழகி வந்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இருவரும் நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் மருத்துவரை அவருடைய இல்லத்தில் சந்திக்க திட்டம் தீட்டிருக்கின்றார். அதன் அடிப்படையில், மருத்துவரின் இல்லத்துக்கு இராணுவ அதிகாரிப் போன்ற உடை அணிந்து வந்திருக்கிறார் ஆரவ்.

டெல்லி காவல்துறை
டெல்லி காவல்துறை

இருவரும் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆரவ்வின் செயல்பாடுகள் மீது சந்தேகமடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் காவல்துறை ஆரவ்வை கைது செய்திருக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, ``குற்றம் சாட்டப்பட்டவர் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து ராணுவ சீருடையை ஆன்லைனில் வாங்கியது தெரியவந்தது. ஆரவ்வுக்கு இந்திய ராணுவத்துடன் எந்த தொடர்பும் இல்லை.

மருத்துவரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக சீருடையில் இருக்கும் தனது புகைப்படங்களையும் அவருக்கு அனுப்பியிருக்கிறார். பின்னர், அந்த மருத்துவரின் வீட்டிற்குச் சென்று, அவருக்கு எதையோ சாப்பிடக் கொடுத்து பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

திண்டுக்கல்: கல்லூரி மாணவி பரிதாப மரணம்; கருவை கலைக்க நாட்டு மருந்து குடித்தாரா? - போலீசார் விசாரணை

திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, கடந்த 24-ஆம் தேதி வயிற்று வலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்."17 வயது கல்லூரி மாணவி க... மேலும் பார்க்க

கோவை அதிமுக பிரமுகர் மனைவி கொலை; கைதான ஓட்டுநர் - விசாரணையில் அதிர்ச்சி

கோவை பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவி சரவணக்குமார், தன் மனைவி மகேஸ்வரி (47) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தாளியூர் பகுதியைச் சேர்ந்த சுர... மேலும் பார்க்க

ஆணவக்கொலையால் சீரழிந்த இரண்டு குடும்பங்கள் - `சாதி' யால் பறிபோன உயிர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு இராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரியான ராமசந்திரன் (24) பால் கறவை தொழில் செய்து வந்திருக்கிறார். அப்பா செல்வம் ஆட்டோ ஒட்டுநர். உடல்நிலை சரியில்லாத நிலையில் ... மேலும் பார்க்க

சென்னை: நள்ளிரவில் பைக் டாக்ஸியில் பயணித்த வடமாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைது

வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கணவருடன் சென்னை, மதுரவாயலில் வசித்து வருகிறார். இவர், கடந்த 26.10.2025-ம் தேதி இரவு பைக் டாக்ஸி மூலம் பள்ளிக்காரணைக்கு சென்றிருக்கிறார். பின்னர், அதே பைக... மேலும் பார்க்க

மும்பை: `காவல் நிலையம் அருகே போதைப்பொருள் தொழிற்சாலை; 5 ஆண்டுகள் விற்பனை ஜோர்' - போலீஸார் அதிர்ச்சி

மும்பையில் எம்.டி. எனப்படும் ஒருவகையான போதைப்பொருளின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இந்த போதைப்பொருளை ஆய்வுக்கூடத்தில் எளிதில் தயாரித்துவிடலாம் என்பதால் சிலர் வீடுகளில் இதனை தயாரித்து விற்பனை செய்கின்ற... மேலும் பார்க்க

நெல்லை: வீடு புகுந்து மாணவிகள் மீது கொடூரமாக தாக்கிய ரவுடி கும்பல்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

முன்பகை காரணமாக வீட்டுக்குள் நுழைந்த ரௌடி கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்து வீசியதுடன், உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக தாக்கினார்கள். அதில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.நெல்லை மாவட்... மேலும் பார்க்க