ஆப்கானுடன் கைகுலுக்கும் இந்தியா; பாகிஸ்தானுடன் குலாவும் அமெரிக்கா! - மாறும் கூட்...
கோவை அதிமுக பிரமுகர் மனைவி கொலை; கைதான ஓட்டுநர் - விசாரணையில் அதிர்ச்சி
கோவை பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவி சரவணக்குமார், தன் மனைவி மகேஸ்வரி (47) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தாளியூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவர் அவர்கள் வீட்டில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை அவர்களின் வீட்டுக்கு சென்ற சுரேஷ், மகேஸ்வரியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, வடவள்ளி காவல்நிலையத்தில் சரணடைந்துவிட்டார்.
அவர்கள் தடாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் விசாரணையில் இறங்கினார்கள். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “சரவணக்குமார், மகேஸ்வரி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இருப்பினும் சுரேஷ் அவர்கள் குடும்பத்தில் பணியாற்றி வந்தார். சுரேஷ் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களின் வீட்டில் பணியாற்றி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தன் கணவனுக்கு உள்ள பெண்கள் தொடர்பு பற்றி கேள்விகளை எழுப்பி, ‘அவர் இப்படியாக நீ தான் காரணம்’ என்று மகேஸ்வரி சுரேஷை அடிக்கடி திட்டி வந்தாராம். இன்றும் அவர் அப்படி சொல்லியதால ஆத்திரத்தில் சுரேஷ் அவரை கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மகேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். சுரேஷை கைது செய்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக அதிமுக பிரமுகர் சரவணக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றனர்.

















