ஆப்கானுடன் கைகுலுக்கும் இந்தியா; பாகிஸ்தானுடன் குலாவும் அமெரிக்கா! - மாறும் கூட்...
சிவகாசி: "சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணியில் பல கோடி ரூபாய் ஊழல்" - ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "அ.தி.மு.க ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு தற்போது இந்த ஆட்சியில் சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது.
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே பாலத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. இந்த மேம்பாலப் பணியில் 15 சதவீதம் கமிஷன் வாங்கி பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், சிவகாசி மாநகராட்சியிலும் ஊழல் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

சிவகாசியின் நீண்ட கால பிரச்னையாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. குறிப்பாக திருத்தங்கல் - சிவகாசி சாலை மற்றும் சாட்சியாபுரம் சாலை என இரண்டு ரயில்வே கிராசிங்குகள் மிகப்பெரிய போக்குவரத்து பிரச்னையாக இருந்து வருகிறது. இதில் சாட்சியாபுரம் சாலை ரயில்வே மேம்பாலம் கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படவே கிடப்பில் போடப்பட்ட இந்தப் பாலப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இறுதிகட்டப் பணிகள் நடைபெறும் நிலையில் இந்த மேம்பாலப் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
















