700 மரங்களுடன் ஜாக்கி ஷெராஃப் பண்ணை வீடு: ஏரி முதல் திறந்த தியேட்டர் வரை சுவாரஸ்...
Suriya: ``ஒரு அண்ணனாக, அதற்கு நான் ரவி தேஜாவுக்கு நன்றி சொல்கிறேன்!'' - சூர்யா
ரவி தேஜாவின் 75-வது திரைப்படமான ‘மாஸ் ஜதாரா’ திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் கதாநாயகியாக ஶ்ரீலீலா நடித்திருக்கிறார்.
ரவி தேஜாவின் ஆஸ்தான மாஸ் மசாலா பார்முலாவில் உருவாகியிருக்கும் இந்த ‘மாஸ் ஜதாரா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா கலந்துகொண்டு ரவி தேஜா குறித்து பேசியுள்ளார்.

சூர்யா பேசுகையில்,
“இன்று நான் ரவி தேஜாவின் ரசிகராக பேசுகிறேன். ஃபேன் பாயாக நான் இங்கு சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன்.
கார்த்தியும் ஜோதிகாவும் இங்கு இருந்திருந்தால், நான் சொல்வதைவிட அவர்கள் ரவி தேஜாவைப் பற்றி அதிகமாகச் சொல்வார்கள்.
நான் கார்த்தியிடமும் ஜோதிகாவிடமும் ரவி தேஜாவின் பெயரை எடுத்தாலே, அவர்கள் பல விஷயங்களைப் பகிர்வார்கள். ரவி தேஜாவுடனான அவர்களுடைய அனுபவங்களையும் அவர்கள் சொல்லிவிடுவார்கள்.
அதீத எனர்ஜிக்கு ஒரு மனித உருவம் இருந்தால், அதுதான் ரவி தேஜா என ஒரு ரசிகராக நான் இதை சொல்வேன். இவர்களை இத்தனை ஆண்டுகளாக கொண்டாடும் ரசிகர்களுக்கும் நான் மரியாதை தருகிறேன்.
சாதாரண மனிதரின் வாழ்க்கையை திரையில் பெரிதளவில் கொண்டு வருபவர் ரவி தேஜா. அப்படியான கதாபாத்திரங்களுக்கு இவரைப் போல வேறு யாராலும் நியாயம் செய்ய முடியாது.
சிரிப்புதான் சிறப்பானதாலும் கடினமானதுமான கலை வடிவம். இத்தனை ஆண்டுகள் பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்வதற்கு தனக்கென ஒரு தனி வழியையும் வைத்திருக்கிறார் ரவி தேஜா.
பல வருடங்களாக மில்லியன் கணக்கான ரசிகர்களை மனதாரச் சிரிக்கவைக்கிறார் ரவி தேஜா.

அதை மீண்டும் மீண்டும் செய்வது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.
கார்த்திக்கு ‘சிறுத்தை’ (ரவி தேஜா நடித்த ‘விக்ரமர்குடு’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குதான் ‘சிறுத்தை’) மிகவும் முக்கியமான திரைப்படம்.
ஒரு அண்ணனாக, அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்கிறேன். தமிழ் ஆடியன்ஸையும் அவர் தொடர்ந்து எண்டர்டெயின் செய்து வருகிறார். சிலருக்கே மட்டுமே இப்படியான திறமைகள் இருக்கும்.
ரஜினி சாரிடம் இந்த காமெடி டைமிங் இருக்கும். பச்சன் சாரிடமும் அது இருக்கும்.
அவருடைய ரசிகராக நீங்களும் எங்களை எண்டர்டெயின் செய்து வருகிறீர்கள். இந்த மாதம் 31-ம் தேதி ரவி தேஜாதான்!” என்றார்.











.jpg)




