செய்திகள் :

வைரலாகும் டைசன் : கழுத்தில் தங்க செயினுடன் நகைக்கடையை பாதுகாக்கும் நாய்!

post image

நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுவதோடு மட்டுமல்லாது பாதுகாப்புக்காகவும் வளர்க்கப்படுவது வழக்கம். உத்தரப்பிரதேசத்தில் நகைக்கடை ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நாய் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

உன்னாவ் நகரில் உள்ள காந்தி நகரில் இருக்கும் ராதாகிருஷ்ணா ஜூவல்லரியில் செக்யூரிட்டிக்கு ஆட்கள் நிறுத்தப்படவில்லை. மாறாக அங்கு ஒரு நாய்தான் கம்பீரமாக உள்ளேயும், வெளியேயும் வலம் வருகிறது.

நகைக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அந்த நாயை பார்த்தவுடன் மிரளத்தான் செய்கின்றனர். ஆனால் டைசன் என்ற அந்த நாய் யாரையும் கடிப்பதில்லை. மாறாக கடைக்கு வருபவர்களை மோந்து பார்த்தே அவர்களை அடையாளம் காண்கிறதாம்.

இந்த வளர்ப்பு பாதுகாவலரை கடை உரிமையாளர் கிருபாசங்கர் ஜெய்ஸ்வால் தனது சொந்த கிராமத்தில் இருந்து அழைத்து வந்திருக்கிறார். மனித செக்யூரிட்டிகள் கையில் துப்பாக்கியுடன் இருப்பது வழக்கம். ஆனா டைசன் கையில் துப்பாக்கி இல்லை. மாறாக அந்த நாய் கழுத்தில் 50 தோலா எனப்படும் தங்க செயின் நாயின் கழுத்தை அலங்கரிக்கிறது. அத தங்க செயின் மதிப்பு இப்போது 50 லட்சம் இருக்கும்.

கடை உரிமையாளர் கிருபாசங்கர் இது குறித்து கூறுகையில், ''கடைக்கு உள்ளேயும், வெளியேயும் டைசன் தான் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறான். வாடிக்கையாளர் மாதிரி திருடன் வந்தால் அவர்களை கண்டுபிடித்துவிடுவான். கடையை சுற்றி திரியும் வெளியாட்களை டைசன் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பான்'' என்றார்.

ஆனால் நாய் கழுத்தில் கிடக்கும் தங்க செயின் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். டைசன் நகைக்கடையில் கழுத்தில் தங்க செயினுடன் பாதுகாப்பு பணியில் ரோந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

ஹோட்டலில் ரூ.10,900-க்கு சாப்பிட்டு, பின்வாசல் வழியாக ஓட்டம்; சுற்றுலா பயணத்தில் சிக்கிய 5 பேர்

பணம் இல்லாமல் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு தப்பிச் செல்வதை படங்களில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையில் 5 பேர் ஹோட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்... மேலும் பார்க்க

மதுவுக்கு மாற்றாக `ஜீப்ரா ஸ்ட்ரிப்பிங்' பழக்கத்தை விரும்பும் Gen Z- என்ன காரணம் தெரியுமா?

உலகம் முழுவதும் இளைய தலைமுறையினரிடையே, குறிப்பாக Gen Z-யினர் மத்தியில், மது அருந்தும் பழக்கம் குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.உடல் நலன், நிதி பாதுகாப்பு மற்றும் மனநலன் போன்ற காரணங்க... மேலும் பார்க்க

நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சிய லூவ்ரே திருட்டு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சீஸ் கேக் சாப்பிட்ட கணவர்; 25 வருட திருமண பந்தத்தை முடித்துக்கொண்ட மனைவி; என்ன நடந்தது?

திருமண நாள் கொண்டாட்டத்திற்காக வாங்கிய சீஸ் கேக்கை, மனைவிக்குத் தராமல் கணவர் முழுவதுமாகச் சாப்பிட்டதால், 25 ஆண்டு கால திருமண உறவை ஒரு பெண் முறித்துக் கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.ஷாடி என்ற ... மேலும் பார்க்க

"அது நமாஸ் அல்ல ஷஷாங்காசனம்"- யோகா கற்றுத் தந்த இஸ்லாமிய ஆசிரியருக்கு எதிராக இந்து அமைப்பு போராட்டம்

மத்திய பிரதேச மாநிலம் பர்ஹன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் அருகில் இருக்கும் தியோஹரி என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஜபூர் தட்வி. இப்பள்ளி மாணவர்கள் தீபாவளி விடுமுற... மேலும் பார்க்க

``நான் விற்பனைக்கு இல்லை'' - ஆர்யன் கான் வெப்சீரியஸை புகழ்ந்தது ஏன்? சசி தரூர் விளக்கம்

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் தி பட்ஸ் ஆஃப் பாலிவுட் என்ற பெயரில் புதிய வெப் சீரிஸ் இயக்கினார். அந்த வெப் சீரிஸ் நெட்பிலிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இதில் லக்ஷ்யா லால்வானி, பாபி தியோல் மற்றும்... மேலும் பார்க்க