செய்திகள் :

ஓசூர்: தமிழ்நாடு அரசு நடத்தும் `விடியல் விடுதி' குளியல் அறைகளில் ரகசிய கேமரா - அன்புமணி கண்டனம்

post image

தமிழ்நாடு அரசும், டாடா நிறுவனமும் இணைந்து நடத்தும் விடியல் விடுதியின் குளியல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது குறித்தும், அந்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் நடத்திய போராட்டம் குறித்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

"ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
ரகசிய கேமரா
ரகசிய கேமரா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள வன்னியபுரத்தில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் விடியல் விடுதியின் எட்டாம் பிளாக்கில் உள்ள குளியல் அறைகளில் ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதில் பதிவான காட்சிகள் வெளியாள்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி அங்கு பணியாற்றும் பெண்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விடுதியில் தங்கியுள்ள பெண்களின் தனியுரிமையை பாதுகாக்க அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து 20 ஆயிரம் பேர் தங்கும் வகையில் விடியல் விடுதியை கட்டிக் கொடுத்துள்ளன.

அரசின் கட்டுப்பாட்டில் தான் இந்த விடுதி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அதனால் இந்த விடுதி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு தங்கியுள்ளனர்.

ஆனால், அவர்களின் தனியுரிமை, கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடைபெற்றிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ரகசிய கேமரா
ரகசிய கேமரா

பெண் தொழிலாளர் விடுதியின் குளியலறையில் காமிராக்களை பொருத்தியதால் ஒரு பெண் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரின் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிந்து அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

பெண் தொழிலாளர்கள் தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தால், அவற்றை முடக்க வேண்டும்.

விடியல் விடுதியில் தங்கியுள்ள பெண் தொழிலாளர்களின் தனியுரிமையை உறுதி செய்வதுடன், அவர்கள் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் எந்த தீங்கும் ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகளிர் உதவித்தொகை: ரூ. 1.68 லட்சம் கோடி கொடுக்கும் 12 மாநிலங்கள் - எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி

மாநில அரசுகள் இப்போது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அல்லது மீண்டும் ஆட்சிக்கு வர புதிய ஆயுதத்தை கையில் எடுத்திருக்கின்றன. அதாவது, பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி, அவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சி... மேலும் பார்க்க

``திமுக கூட்டணியில் திருமாவளவன் ஏன் இருக்கிறார்? அவர்களிடம் சமூகநீதியே இல்லை’’ - அன்புமணி

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் நேற்று இரவு நடைபயணம் மேற்கொண்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், அரூர் பேருந்து நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பே... மேலும் பார்க்க

ஜோஹ்ரான் மம்தானியை வீழ்த்த ட்ரம்ப் செய்த உள்ளடி வேலை; படுதோல்வி அடைந்த ஆளும் குடியரசுக் கட்சி!

உலக அளவில் ராணுவ பலம் மிக்க நாடு, பொருளாதார பலம் மிக்க நாடாக விளங்கும் அமெரிக்கா இனவெறிக்கும் பெயர்போனதுதான்.அப்படியான அமெரிக்காவில் ஒரு இஸ்லாமியர் தேர்தலில் வெல்வது அவ்வளவு எளிதானதல்ல. அவர் இந்திய வம... மேலும் பார்க்க

நியூயார்க்: பாலிவுட் பாடல் முதல் நேருவின் மேற்கோள் வரை - இந்திய வம்சாவளி மேயரின் வெற்றிக்கொண்டாட்டம்

அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமான நியூயார்க்கின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானி. 34 வயதாகும் இவர் முதல் இஸ்லாமிய மேயரும் ஆவார். தனது வெற்றி உரையில் இந்தியாவின் மு... மேலும் பார்க்க

``சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக் கருத்து

தெலங்கானாவில் திங்களன்று அரச பேருந்தும், ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற லாரியும் செவெல்லா மண்டலத்தில் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில், பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள், தாயுடன்... மேலும் பார்க்க

SIR: ``பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்'' - திமுக என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு

SIR பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து திமுக கழக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (05.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் வழ... மேலும் பார்க்க