ஜோஹ்ரான் மம்தானியை வீழ்த்த ட்ரம்ப் செய்த உள்ளடி வேலை; படுதோல்வி அடைந்த ஆளும் குட...
Rahul Ravindran: ``திருமணத்துக்குப் பிறகு என் மனைவியிடம் தாலி அணிவது..." - ராகுல் ரவீந்திரன்
நடிகர் மற்றும் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `தி கேர்ள் ப்ரெண்ட்' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.
இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கான ப்ரோமோஷன் சமயத்தில் ராகுல் ரவீந்திரன் தாலி குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராகுல் ரவீந்திரன் பின்னணி பாடகி சின்மயியின் கணவர் என்பது பலரும் அறிந்ததுதான்.
அந்தப் பேட்டியில் ராகுல், "திருமணத்துக்குப் பிறகு என் மனைவி சின்மயியிடம் தாலி அணிவது உன்னுடைய தேர்வு என்று சொன்னேன்.
அதை அணியாதே என்று நான் ஒருபோதும் அவரிடம் சொல்ல மாட்டேன். ஆனால் ஆண்களுக்கு திருமணமாகிவிட்டது என தெரியப்படுத்தும் அடையாளம் எதுவும் கிடையாது.

ஆனால், பெண்களிடத்தில் திருமணமாகி விட்டதாக அடையாளத்தைக் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பது தவறு." எனக் கூறியிருக்கிறார்.
டோலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரன் தமிழில் விண்மீன்', வணக்கம் சென்னை', `தி கிரேட் இந்தியன் கிச்சன்' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
















