செய்திகள் :

Roja: `பிரமாண்டமான கம்பேக்' - 12 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவுக்கு வரும் நடிகை ரோஜா!

post image

12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு வருகிறார் நடிகை ரோஜா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வந்த ரோஜா கடைசியாக 2015-ம் ஆண்டு ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் `என் வழி தனி வழி' படத்தில் நடித்திருந்தார்.

அப்படத்திற்குப் பிறகு திரைத்துறையிலிருந்து விலகிய ரோஜா அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

Actress Roja
Actress Roja

2014-ம் ஆண்டு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை ரோஜா 2015-ம் ஆண்டிற்குப் பிறகு திரைத்துறைக்கு வரவில்லை.

2014-ம் ஆண்டைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது மீண்டும் திரைத்துறைக்குள் என்ட்ரி தந்திருக்கிறார் ரோஜா.

அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கத்தில், கங்கை அமரன், சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேஷ் நடிக்கும் `லெனின் பாண்டியன்' படத்தின் மூலம்தான் கம்பேக் கொடுக்கிறார் ரோஜா.

இவர் இப்படத்தில் சந்தானம் என்கிற கேரக்டரில் நடிக்கிறார்.

இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. ரோஜா மீண்டும் நடிக்க வந்திருப்பது குறித்து சத்ய ஜோதி நிறுவனம், "90களின் ராணியான ரோஜாவை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித்திரைக்கு மீண்டும் வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்.

'லெனின் பாண்டியன்' படத்தில் சந்தானம் என்கிற கதாபாத்திரத்தில் அவரை வரவேற்கிறோம். ஐகானின் பிரமாண்டமான கம்பேக்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Rahul Ravindran: ``திருமணத்துக்குப் பிறகு என் மனைவியிடம் தாலி அணிவது..." - ராகுல் ரவீந்திரன்

நடிகர் மற்றும் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `தி கேர்ள் ப்ரெண்ட்' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். The Gir... மேலும் பார்க்க

Thalaivar 173: 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி - சுந்தர் சி காம்போ; கமல் தயாரிப்பில் ரஜினி

ரஜினி தற்போது `ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கி வரும் அப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினி தற்போது பம்பரமாய் சுற்றி வருகிறார். JAILER 2`ஜெயிலர் 2... மேலும் பார்க்க

Anirudh: ஜெயிலர் 2 சிங்கிள்; ஜனநாயகன் பி.ஜி.எம்; அரசன் பாடல்கள் - அனிருத்தின் அசத்தலான லைன் அப்

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பாணியை இசையை உருவாக்கி விட்ட அனிருத், இப்போது பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். ஷாருக்கானின் 'ஜவான்' வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவரின் 'கிங்' படத்திற்கு ... மேலும் பார்க்க

Gouri Kishan: ``எனக்கு ஹிட் கிடைச்சு சில நாட்கள் ஆகிடுச்சுதான்" - மனம் திறக்கும் கெளரி கிஷன்

அறிமுக படத்திலேயே நடிகர்களுக்கு ப்ரேக் கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஆனால், அதை தன்னுடைய முதல் படத்திலேயே சாத்தியப்படுத்திக் காட்டியவர் கெளரி கிஷன். தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழ... மேலும் பார்க்க