செய்திகள் :

Kamal Haasan: ரீ ரிலீஸுக்கு தயாராகும் கமலின் கல்ட் க்ளாசிக்ஸ் - என்னென்ன படங்கள் தெரியுமா?

post image

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு 'தேவர் மகன் 2' எடுப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் முடிவு செய்தது. முன்பு சிவாஜி - கமல் காம்பினேஷன் போலவே இப்போது கமல் - சூர்யா இணைவது என்றும் திட்டமிடப்பட்டது.

இடையில் கமல் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இப்போது பழைய தேவர் மகன் படத்தை மீண்டும் நவீன 5K தொழில்நுட்பத்தில் வெளியிட தயாராகி விட்டார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ஒரு வேளை 'தேவர் மகன் -2' திட்டம் கைவிடப்பட்டதா என்பது குறித்து கமலுக்கு நெருக்கமான புள்ளிகளிடம் விசாரித்தோம், "இந்த தலைமுறை இளைய தலைமுறை பழைய தேவர் மகன் படத்தை பார்த்தது இல்லை.

இப்போது புதுப் படத்துக்கு இசையமைப்பது போல 'தேவர் மகன்' படத்துக்கு ரீ ரெக்கார்டிங் பார்த்து பார்த்து பிரமாதமாக செய்து இருக்கிறார். திரையில் படம் பார்ப்பவர்கள் பிரமித்து போவார்கள்.

̀தேவர் மகன் 2' படத்தில் கமல் , சூர்யா காம்பினேஷன் திட்டம் கைவிடப்படவில்லை. முதல் பாகம் பார்த்து விட்டால் இரண்டாம் பாகத்தை இந்த தலைமுறை நிச்சயம் ரசிக்கும்." என்று கடகடவென கொட்டினார்.

அடுத்து அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தையும் மறுபடியும் வெளியிட போகிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் மேடையிலேயே குள்ளன் வடிவில் கமல் வந்து சிறந்த நடிகர் விருது வாங்கிய நாள் நிகழ்வு நினைவில் ஆடுகிறது.

இதுவரை குள்ளனாக எப்படி நடித்தேன் என்பதை பரமரகசியமாக பாதுகாத்து வருகிறார். கமலின் இந்த அரிய பரிசோதனை முயற்சியை இந்த தலைமுறை கண்டிப்பாக போற்றி, பாராட்டி மகிழும்.

பஞ்சதந்திரம்
பஞ்சதந்திரம்

முன்பு குறிப்பிட்ட இரண்டு படங்களை விட கமலுக்கு முற்றிலும் மாறுபட்ட கதையும், கதாபாத்திரமும் கொண்டது பஞ்ச தந்திரம் திரைப்படம்.

முன்பு வெளிவந்த போது ஒரு காமெடிக் காட்சியை ரசித்து முடிக்கும் முன்பே அடுத்த காமெடி வந்து மூச்சு திணற வைக்கும் முழுநீள காமெடி சித்திரம். காமெடி சக்ரவர்த்தி கிரேஸி மோகன் கைவண்ணத்தில் உருவானது.

P.L தேனப்பன் தயாரிப்பில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், கமலின் காமெடி நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.

இந்தக்கால இளைஞர்கள் மனதில் உள்ள பணிச்சுமை அனைத்தையும் அசால்ட்டாக காணாமல் போகச் செய்யும் காமெடி திரைப்படம். தேவாவின் இசையில் மீண்டும் நவீன தொழில்நுட்பத்தில் வெளிவர இருக்கிறது.

``சிங்கம் ஒன்று புறப்பட்டதே" -`அருணாச்சலம்' பட ஸ்டில்ஸ் | Photo Album

அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள்அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள்அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள்அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள்அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள்அருணாச்சலம் படத்தின் புகைப்படங... மேலும் பார்க்க

``உங்க வெயிட் என்ன?'' - சர்ச்சையான கேள்வி; கோபமான 96 நடிகை கெளரி கிஷன்

தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ போன்ற திரைப்படங்களிலும், மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துத் பிரபலமானார்.சமீபத்தில் தமிழில் ‘ஹாட் ஸ்பா... மேலும் பார்க்க

"'ஆட்டோகிராப்' படம் பார்த்துட்டு பாலுமகேந்திரா சார் சொன்ன அந்த வார்த்தை" - சேரன் உருக்கம்!

சேரன், இயக்​கி, தயாரித்​து, ஹீரோ​வாக நடித்த ‘ஆட்​டோகி​ராப்’ திரைப்​படம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. 2004-ம் ஆண்டு வெளி​யாகி பள்​ளி, கல்​லூரி, இளமை பரு​வங்​களின் காதல் ... மேலும் பார்க்க

நாயகன் ரீரிலீஸ்: ``அப்பாவுடைய விசில் சத்தம் கேட்க மாட்டேங்குதுன்னு சொன்னேன்" - இந்திரஜா ரோபோ சங்கர்

கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய `நாயகன்' படத்தை இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.கமலின் புதிய படமோ, பழைய படத்தின் ரீரிலீஸோ, அங்கு தீவிர கமல் ரசிகராக மறைந்த நடிகர் ரோபோ சங... மேலும் பார்க்க

HBD Kamal: முதல் பாட்டு; மலையாளப் படம்; சாமிப் பாடல் - சக ஹீரோக்களுக்காகப் பாடிய கமல்ஹாசன் | Rewind

நாளை கமல்ஹாசனின் பிறந்த நாள். இந்திய சினிமாவில் கலை, தொழில்நுட்பம் தொடங்கி, துறை சாராத விஷயங்கள் வரை அத்தனையிலும் கற்றுத் தேர்ந்தவர் கமல்ஹாசன்தான் என்பார்கள்.நடிப்பு தவிர, நடனம், தயாரிப்பு, இயக்கம், ப... மேலும் பார்க்க

Kaantha: ``8 மாசம் பாதி மீசையோடவே சுத்திட்டு இருந்தேன்!" - பகிரும் சமுத்திரக்கனி

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `காந்தா' திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது. Kaantha Movieதுல்கர் சல்மான், ரானா, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போஸ் எனப் பலரும் நடித்து... மேலும் பார்க்க