சிவகாசி: `வீட்டு வரி ரசீதுக்கு ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம்' -கவுன்சில...
``எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு தான் ஓட்டு கேட்க வருவேன்'' - சுரேஷ்கோபி சூளுரை
திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. எம்.பி-யும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி, கேரள மாநிலத்தில் மக்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
“கலுங்கு சௌகரித சம்வாத யாத்ரா” என்ற பெயரில் மக்களுடன் நட்பாக உரையாடும் நிகழ்ச்சியை ஏற்கனவே நடத்தினார். இப்போது வளர்ச்சி குறித்து மக்களுடன் பரஸ்பரம் கருத்து பரிமாறும் விதமாக “எஸ்.ஜி. காஃபி டைம்” (சுரேஷ் கோபி காஃபி டைம்) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

திருச்சூர் மாநகராட்சி ஸ்டேடியத்தில் நடந்த எஸ்.ஜி. காஃபி டைம் நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி பேசுகையில்,
“கேரளாவில் எங்காவது ஒரு இடத்தில் எயிம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டாமல் நான் மீண்டும் உங்களிடம் ஓட்டு கேட்டு வரமாட்டேன்.
ஆலப்புழாவில் எயிம்ஸ் கொண்டு வர முயற்சிப்பேன். கேரள மாநிலத்திற்கு எயிம்ஸ் மருத்துவமனை வழங்கப்படுமெனில், ஆலப்புழாவில்தான் அது அமைக்கப்பட வேண்டும். கேரளாவில் மிகவும் பின்தங்கி இருக்கும் இடம் இதுதான்,” என்றார்.
கேரள மாநிலத்தில் ஆலப்புழாவும் இடுக்கியும் தான் மிகவும் பின்தங்கி உள்ளன. இந்த இரண்டு மாவட்டங்களும் முன்னேறவே இல்லை. புவியியல் ரீதியாக எயிம்ஸ் மருத்துவமனை இடுக்கியில் அமைக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே ஆலப்புழாவில்தான் எயிம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.
திருச்சூர் தொகுதி மக்கள்தான் என்னை எம்.பி.யாகத் தேர்ந்தெடுத்தனர். திருச்சூருக்காக மட்டுமே செயல்படும் எம்.பி.யாக நான் இருக்க மாட்டேன்; கேரளாவுக்காக செயல்படும் திருச்சூர் மக்களின் எம்.பி.யாக இருப்பேன் என அன்று முதலே கூறி வருகிறேன்.

“ஆலப்புழாவில் எயிம்ஸ் அமைக்க அனுமதி கிடைக்கவில்லை என்றால், திருச்சூரில் எயிம்ஸ் அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துவேன். சரியான நேரத்தில், சரியான இடத்தில் எயிம்ஸ் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
நானும் அதை குறிப்பிட்டு ஒரு விஷயம் சொல்லுகிறேன் - 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு கேட்டு வர வேண்டுமானால், கேரளாவில் எங்காவது ஒரு இடத்தில் எயிம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டிவிட்டு தான் உங்கள் முன்னால் நான் வருவேன்,” என்றார்.
















