செய்திகள் :

அதிமுக: முன்னாள் எம்.பி உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம்! - எடப்பாடி பழனிசாமி அதிரடி

post image

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது. இதையடுத்து, `எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்’ என செங்கோட்டையன் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

ஓபிஎஸ் - செங்கோட்டையன் - டிடிவி
ஓபிஎஸ் - செங்கோட்டையன் - டிடிவி

கடந்த 30-ஆம் தேதி பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்திக்கு சென்ற செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் ஒரே காரில் சென்றதையும், டிடிவி தினகரனுடன் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்ததையும் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி, மூவரும் துரோகிகள் என்றும் பேசி வைத்துக் கொண்டு ஒன்றாக தேவர் ஜெயந்திக்கு வந்துள்ளார்கள் என்றும் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எந்த தயக்கமும் இல்லை என கூறியிருந்தார். சொன்னபடியே செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் "தி.மு.க.வைப் போல அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்களும் வருகிறார்கள். இது நாடே அறிந்த உண்மை" என்று குற்றம்சாட்டியிருந்தார்.

முன்னாள் அதிமுக எம்.பி. சத்தியபாமா
முன்னாள் அதிமுக எம்.பி. சத்தியபாமா

இந்நிலையில் செங்கோட்டையனின் ஆதரவாளர் முன்னாள் எம்.பி சத்தியபாமா, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன்,, நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் உட்பட 12 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூரில், மினி டைடல் பார்க்; திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - 600 பேருக்கு வேலை வாய்ப்பு!

வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைப்பதற... மேலும் பார்க்க

``கே.என்.நேரு கிட்ட, ரூல்ஸ பாலோ பண்ணுங்கனு, படிச்சு படிச்சு சொன்னீங்களா?'' - தவெக அருண்ராஜ் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது.இந்நிலையில் இ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின்: சிவகாசியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு? ஆட்சியரிடம் ஆவேசப்பட்ட பெண்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக, அரசு புறம்போக்கு நிலம் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நத... மேலும் பார்க்க

"தெலுங்கு மக்களுக்கு NTK எதிரியல்ல; 12 தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம்" - சொல்கிறார் கார்த்திகைச்செல்வன்

'சாதி பார்த்து விழும் வாக்குகள் எனக்கு தீட்டு' எனப் பேசிவந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களையே பெரும்பாலும் சாதி பார்த்துதான் தேர்வு செய்... மேலும் பார்க்க

``அரசுக்கெதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை" - CJI கவாய் ஓபன் குற்றச்சாட்டு!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலித் மற்றும் முதல் பௌத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்.இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதுதான், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரசே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்து... மேலும் பார்க்க

தென்காசி: "நான் பாட்டு கேட்கும் ரேடியோவை திருடிட்டாங்க" - ஆட்சியரிடம் 95 வயதான மூதாட்டி புகார்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி.இவர் தனிமையில் வசித்து வருவதால் பொழுதை போக்குகின்ற வகையில் ரூபாய் 700 கொடுத்து ரேடியோ ஒன்று வாங்கி அதன்... மேலும் பார்க்க