What to watch: `நாயகன்', `ஆரோமலே', `கிஸ்' - இந்த வாரம் வெளியாகியுள்ள சீரிஸ் மற்ற...
``நடிகர் விஜய் பலவீனமானவர், பிரச்னை வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்'' - சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“தமிழக அரசின் அனுமதி பெறாமல் ஒரு செங்கலைக்கூட மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசு எடுத்து வைக்க முடியாது.
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சம்பவ இடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்காமல், அவரது வீட்டில் போய் அமர்ந்து கொண்டவர் நடிகர் விஜய். இதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

முதல்வரிடம் குறுகிய எண்ணம் கிடையாது.தொலைநோக்குப் பார்வை உள்ளது. ஒருவரை தண்டிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்திருந்தால், அன்றே அவரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்.
`எந்த அரசியல் தலைவர்களும் தன் தொண்டர்களை அழைத்து வந்து கொலை செய்ய வேண்டும் என்று எண்ண மாட்டார்கள். அந்த அடிப்படையில்தான் விஜய்யை பார்க்கிறேன்' என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்தில் தமிழக அரசு தனது கடமையை சிறப்பாக செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும் செய்தது. பெருந்தன்மையோடு நடந்த முதல்வரை சிறுமைபடுத்தவேண்டும் எனப் பேசுபவர்கள் சிறுமைபட்டு போவார்கள்.
41 பேர் உயிரிழந்தவுடன் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி ஒளிந்தவர்கள், நானும் ரெளடிதான் என வடிவேலு நகைச்சுவை போல சொல்லி வருகிறார்கள்.

கரூர் சம்பவத்தில் தமிழக அரசு தனது கடமையை சிறப்பாக செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும் வழங்கியது. பெருந்தன்மையோடு நடந்த முதல்வரை சிறுமைபடுத்தவேண்டும் எனப் பேசுபவர்கள் சிறுமைபட்டு போவார்கள்.
41 பேர் உயிரிழந்தவுடன் 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என ஓடி ஒளிந்தவர்கள், 'நானும் ரெளடிதான்' என வடிவேலு நகைச்சுவை போல சொல்லி வருகிறார்கள்.
நடிகர் விஜய் பலவீனமானவர். ஒரு பிரச்னை வந்தால், அவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் ஓடி ஒளிந்துக் கொள்கிறார்கள். பலவீனமானவர்கள் தங்களை வீரன் எனக் காட்டிக் கொள்ள எதையாவது சொல்லிக் கொள்வார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து என்ன ஆனார்கள் என்பது வரலாற்றில் உள்ளது,” என்றார்.
















