செய்திகள் :

'எனக்கு டிரெயின்ல நடந்த 'அந்த' சம்பவத்தை கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கலாம்; ஆனா..' | #HerSafety

post image

ரெண்டு, மூணு பசங்க சேர்ந்து இருந்தா... தண்ணீ அடிச்சிருந்தா... பொண்ணுங்க அரைகுறையா டிரஸ் பண்ணியிருந்தா தான் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும்னு சொல்ல முடியாது.

இது எதுவுமே இல்லாத போது தான், எனக்கு சில விஷயங்கள் நடந்திருக்கு. நடத்துகிட்டும் இருக்கு...

பொதுவா, சென்னை சென்ட்ரல்ல இருந்து தான் கோயம்புத்தூருக்கு டிரெயின் ஏறுவேன். அந்தத் தடவை டிக்கெட் கிடைக்காததால, எக்மோர்ல ரிசர்வ்ட் கோச்ல டிக்கெட் புக் பண்ணேன்.

நைட் டிராவல் தான்னாலும், உக்காந்துட்டே தான் போக வேண்டிய சூழல். எனக்கு எதிர்ல ஒரு ஃபேமிலி உக்கார்ந்திருந்தாங்க. ஒரு ஆண், அவரோட மனைவி, அவரோட நாலு இல்லனா அஞ்சு வயசு பொண்ணு, அவரோட அம்மாவோ, மாமியாரோ யாரோ ஒருத்தவங்க கூட வந்துருத்தாங்க.

ரயில்
ரயில்

அன்னைக்கு ஆபீஸ்ல கொஞ்சம் அதிக வேலை, ரெண்டு, மூணு நாளா சரியா தூக்கம் இல்லாததால, என்னால தூக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியல.

கொண்டு போயிருந்த சால்வையை மேலே போத்திட்டு நான் பாட்டுக்கு தூங்க ஆரம்பிச்சுட்டேன்.

ஏதோ டிஸ்டர்ப் ஆகி 'டக்'குனு முழிப்பு வர்ற... முழிச்சு பார்த்தா, எனக்கு எதிர்ல உக்காந்திருந்த அந்த ஃபேமிலி மேன் என்னைய உத்து பார்த்துகிட்டு இருந்தாரு. நான் டிஸ்டர்ப் ஆகி எந்திரிச்சு... அவரு பாக்கறதை நான் பாத்த அப்புறமும் அவரு கொஞ்சம் கூட பார்வைய திருப்பவே இல்லை.

அவரு பாக்கறாருனு ஒரு மாதிரி இருக்க, நான் கொஞ்சம் நேரம் ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பாக்க ஆரம்பிச்சா, அப்பவும் அவரு என்னையவே பாத்துட்டு இருக்கறதை ஃபீல் பண்ண முடிஞ்சுது.

இருந்த டயர்ட்ல கண்ணு சொக்க, என்னையும் மீறி கொஞ்ச நேரத்துல தூங்கிட்டேன். மீண்டும் திடீர்னு முழிப்பு. அவரு பாத்துக்கிட்டிருக்காரு. இது அந்தப் பயணத்துல கிட்டத்தட்ட 10 - 15 தடவை நடந்திருக்கும்.

நான், ஒரு பெண்ணை பார்க்கும் பார்வையின் ஆழத்தையும், அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியாதவள் அல்ல. அது பெண்ணை சுடும் பார்வை.

பெண் பாதுகாப்பு
பெண் பாதுகாப்பு

அப்போ அந்த சமயத்துல எனக்கு பயத்தை தாண்டி, ஏதோ ஒரு ஃபீல் அதை எப்படி சொல்றது சொல்றது... என்னவா குறிப்பிடறதுனு இப்போ யோசிச்சு பார்த்த கூட புரியல... தெரியல...

கோயம்புத்தூர் ஸ்டேஷன்ல இறங்கி, என்னை கூப்பிட்டு போக வந்த அப்பாவை பாத்ததும் எனக்கு கிடைச்ச நிம்மதி... சந்தோஷம் இருக்கே. அது எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. இந்த வாக்கியத்துக்கும் மேலா எத்தனை வாக்கியங்கள் இருந்தாலும், அந்த அத்தனை வாக்கியங்களும் அந்த நிம்மதிக்கு பொருந்தும்.

அடுத்த சம்பவமும் டிரெயின்ல தான்.

'டிரெயின்ல எப்பவும் நைட் டைம் தான போறோம். ஒரு தடவை, பகல் டைம்ல போய் பாக்கலாம்'னு இன்டர்சிட்டில கோயம்புத்தூர்ல இருந்து சென்னைக்கு வந்தேன்.

போன் பாத்துக்கிட்டு வந்த எனக்கு, ஒரு டிஸ்டர்ப்ட் ஃபீல். அண்ணாந்து பாத்தா 40 - 50 வயசு இருக்க ஒரு அங்கிள் என்னை குறுகுறுனு பாத்துக்கிட்டு இருந்தாரு.

நாம தான் ஏதோ தப்பா நினைக்கிறோம்னு போன் பாக்க தொடங்கினேன். திரும்பவும் ஒரு ஃபீல். இப்போ அவரு என்னை தான் பாக்கறாருனு கன்ஃபார்மே பண்ணிட்டேன். மீண்டும் அதே பார்வை தான்.

ரயில்வே
ரயில்வே

இத்தனைக்கும் அவரு அவரோட மனைவியோட வந்திருந்தாரு.

முதல்ல நின்னுக்கிட்டு இருந்த அவரு, சீட் கிடைக்க பக்கவாட்டுல இருந்த எதிர்வரிசை சீட்ல அவரோட மனைவியோட உக்காந்தாரு.

அப்பவும் அவரோட மனைவியோட உக்காந்திருந்தாலும், பேசிக்கிட்டிருந்தாலும், அப்பப்போ அவரோட அந்த பார்வை வந்து போயிட்டே தான் இருந்தது.

இன்னொரு சம்பவம் என்னோட காலேஜ் டைம்ல நடந்தது.

சின்ன வயசுல இருந்து ஸ்கூலுக்கு அப்பா தான் கூப்பிட்டு போய்ட்டு வருவாரு. காலேஜ்லயும் காலேஜ் பஸ் தான். இன்டர்ஷிப் பண்ணும்போது, ஃபர்ஸ்ட் டைம் பஸ்ல போய் வந்துட்டு இருந்தேன்.

அதுவரைக்கும் நான் பஸ்லேயே போனது இல்லையானா போயிருக்கேன் தான். ஆனா, அப்போ அம்மா, அப்பா கூட இருப்பாங்க. இல்லைனா, ஸ்கூல், காலேஜ் டைம் கூட்ட நேரத்துல நான் பஸ்ல ஏறுனது இல்ல.

பஸ்
பஸ்

அது என்னவோ தெரியாது... காலேஜ் ரூட்ல ஓடுற பிரைவேட் பஸ்கள்ல பெரும்பாலும் இளைஞர்கள் தான் கண்டக்டர்கள்லா இருப்பாங்க.

நான் அன்னைக்கு ஏறுனா பஸ்லயும் என்ன விட 1-2 வயசு பெரியவங்க தான் கண்டக்டர். அந்தப் பஸ்ல செம்மையான கூட்டம்.

டிக்கெட் கொடுக்கறேன்ங்கற பேர்ல அந்தக் கண்டக்டர் நான் உட்பட அங்க இருந்த எல்லா காலேஜ் பொண்ணுங்களயும் இடிச்சுக்கிட்டே தான் இருந்தாரு. அது கூட்டத்துனாலேயோ, பஸ்ல பிரேக் போட்டதுனலேயோ ஏற்பட்ட இடிப்பு அல்ல. அதை ஃபீல் பண்ண, எனக்கு நல்லாவே தெரியும். ஒவ்வொரு பெண்ணுக்கும் தெரியும்.

ந்த சம்பவங்கள் எல்லாம் சாம்பிள் தான். ஒவ்வொரு பொண்ணுங்க கிட்டயும் கேட்டா, இப்படி ஆயிரம் கதைகள் இருக்கும். நான் சொன்ன சம்பவங்களை விட, அதி பயங்கரமான சம்பவங்களைக் கூட கடந்து வந்துருப்பாங்க.

நான் சொன்ன முதல் சம்பவத்துல, அவரு மனைவி, மகள், அம்மா/மாமியார்னு மூணு பெண்களோட தான் வந்துருந்தாரு. என்னை அவரு அப்படி பாத்துக்கிட்டு இருக்கும்போது, அவரோட தோளுல அவரோட மகள் தூங்கிட்டு இருக்கு... அந்தக் குழந்தைய அவரு அவ்வளவு பத்திரமா, இறுக்கமா பிடிச்சிருந்தாரு.

ரயில்
ரயில்

அவரோட மகள் மாதிரி தான, என்னோட அப்பாவுக்கும் நான். என்னை ஏதோ ஒரு நொடில நானும் இன்னொரு அப்பாவோட பொண்ணு தான்னு நினைச்சிருந்தாலோ, இந்தப் பொண்ணுக்கு நாம செய்யறது இன்னும் 15-18 வருசத்துல இன்னொரு ஆண் நம்ம மகளுக்கு செய்றதுக்கான வாய்ப்பு இருக்குனு நினைச்சிருந்தாலோ, அவரோட கண்ணு தானா திரும்பியிருக்கும்.

ரெண்டாவது சம்பவத்துல, அந்த அங்கிள் அவரோட மனைவிக்கிட்ட நல்லா சிரிச்சு பேசிக்கிட்டு வராரு. அவங்க மனைவி ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. கிட்டத்தட்ட என் அப்பா வயசு. சந்தோஷமா மனைவியோட போய்க்கிட்ட இருக்க அவருக்கு என் பக்கம் ஏன் அந்த பார்வை?

அன்னைக்கு என்ன பெரிய ஆச்சரியம்னா, கிட்டத்தட்ட என்னோட வயசுல இருந்த பசங்க அவங்கவங்க வேலைய பாத்துக்கிட்டு இருந்தாங்க.

நான் அந்த அங்கிள் பார்க்கறது வீடியோ எடுக்கணும். எடுத்தா அவருக்கு ஒரு பயம் வரும்னு நினைச்சேன். ஆனா, அதை என்னால செய்யவே முடியல. இப்போ நினைச்சாலும் அதுக்கு பதில் தெரியல.

மூணாவது சம்பவம், தினமும் காலேஜ் பொண்ணுங்க பயணிக்கற பஸ். எத்தனை பொண்ணுங்கள அந்தக் கண்டக்டர் இப்படி டச் பண்ணியிருப்பாரு, அந்தப் பொண்ணுங்க எப்படி ஃபீல் பண்ணிருப்பாங்க.

என்னால இந்த மூணு இடங்கள்லயும் ரியாக்ட் பண்ணியிருக்க முடியும் அல்லது கம்ப்ளெயின்ட் மாதிரியான எதாவது ஒரு விஷயத்தை முன்னெடுத்திருக்க முடியும். ஆனா, நான் இதை எதுவுமே செய்யல.

பெண் பாதுகாப்பு
பெண் பாதுகாப்பு

'இதெல்லாம் நடக்கற ஒண்ணு தானே'னு இந்த சம்பவங்களை இயல்பாக்குற எண்ணம் தான் என்னை ரியாக்ட் பண்ண விடலனு சொல்லலாம்.

இதை வெளிய சொன்னா, வீட்டுல பயப்படுவாங்க... ஒவ்வொருத்தருக்கும் அவங்க அடுத்தடுத்த வளர்ச்சிகள் பாதிக்கும். எனக்கு இன்டர்ன்ஷிப் முடிச்சிருக்க முடியாது. அதனால, எதுக்கு பிரச்னைனு சொந்த விஷயத்துலேயே தள்ளி நிக்கற நிலைமை தான் பெண்களுக்கு.

இந்த எண்ணம் எங்களுக்குள்ள எப்படி வந்துச்சு. இந்த எண்ணத்தை எங்களுக்கு யாரும் சொல்லி கொடுக்கல. இயல்பா, சாப்பிட, தூங்க தெரிஞ்ச மாதிரி இதுவும் ஒரு விஷயம் ஆகிடுச்சு.

சின்ன பசங்க, போதை ஆசாமிகளால மட்டும் பெண்களுக்கு எதிரான பிரச்னை ஏற்பட்டுடல. இந்த மாதிரியான ஃபேமிலி மேன்கள் கிட்ட இருந்தும் தான் வருது. ஆனா, அதை பத்தி நாம யாருமே பேசறது இல்ல.

பாக்க தான செஞ்சாங்க... அதுல என்ன ஆயிடுச்சுனு அதை அசால்டாக கடக்க முடியாது. தேவையில்லாத பார்வையும் எத்திக்ஸ் ரீதியிலும் தப்பு தான்... சட்ட ரீதியிலும் தப்பு தன்.

ஒப்பீட்டுல அளவுல சின்ன விஷயத்தை ஃபேஸ் பண்ண எனக்கே இவ்வளவு மன உளைச்சல்னா, நம்ம தினம் தினம் செய்திகள்ல பாக்கற பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கு எப்படி இருக்கும். அந்த ஃபீலை மன உளைச்சல்கள்ங்கற வார்த்தைகளுக்குள்ள அடக்கவே முடியாது. அந்த ஃபீலை குறிப்பிட அந்த வார்த்தைய ரொம்ப குறைச்சலா இருக்க மாதிரி இருக்கு.

பெண்களுக்கு எதிரான ஒரு விஷயத்தை செய்யாம இருக்க ஆண்கள் ஒண்ணும் பெண்களை அவங்க அம்மாவாவோ, அக்கா, தங்கச்சியாவோ, மகளாவோ பாக்க வேண்டாம். பெண்களை பெண்கள்ங்கற பாலின அடையாளத்தை தாண்டி சக மனிதர்களா பாத்தாலே போதும்.!

மீண்டும்... மீண்டும்...

கோவை மாவட்டத்தில் நடந்த கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் சம்பவம் பெரிய அதிர்ச்சியை கிளப்பியது.

அதன் அதிர்வுகள் முழுமையாக அடங்கும் முன்பே இப்போது ஒரு சம்பவம். இப்போது என்று கூறுவதை விட, தொடர்ந்து என்று கூறுவது சரியாக இருக்கும்.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விகடன் ஒரு முன்னெடுப்பை எடுக்கிறது.

அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு இங்கே ஒரு சர்வே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு நீங்கள் பகிரும் பதில்கள் மிக முக்கியமானது. உங்களின் தனிப்பட்ட அடையாளம் பாதுகாக்கப்படும்.

`யாரை நம்புவது? எங்கே அனுப்புவது?' - பெண் குழந்தையை பெற்ற ஒரு தாயின் பரிதவிப்புகள் | #HerSafety

பிஞ்சுக் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். சென்னை, கோவை என ஊர்களின் பெயர் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிஞ்சு முகங்கள் சிதைக்க... மேலும் பார்க்க

கோவை மாணவியின் கண்ணீரே கடைசியாக இருக்கட்டும்! | #HerSafety

கோவை விமான நிலையம் அருகே கடந்த 2 ஆம் தேதி இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி பெண்களுக்கு எதிரா... மேலும் பார்க்க

'ரெண்டே ரெண்டு நிமிஷம் பெண்களே! நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?’ | உங்கள் கருத்து? |#HerSafety

மீண்டும்... மீண்டும்...கோவை மாவட்டத்தில் நடந்த கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் ப... மேலும் பார்க்க

`இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety

'கல்லு, கண்ணாடி... முள்ளு, சேலை... ஆம்பளைன்னா அப்பிடி இப்பிடித்தான்' என்கிற போன நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், 'அந்த ராத்திரி நேரத்துல இந்தப் பொண்ணு ஏன் அங்க போகணும்' என்கிற புத்தம் புதிய கருத்தை, சமூக வ... மேலும் பார்க்க