சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் மற்றும் சிவசக்தி விநாயகா் கோயில், கெங்கையம்மன் ஆகிய கோயில்கள் உள்ளது. தற்போது, இந்தக் கோயில்களை புணரமைத்து புதிதாக சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கோயில் மற்றும் கோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பூமி பூஜை தாண்டவ சமுத்திரம் ஸ்ரீலஸ்ரீசீனுவாச சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதில், கணக்கன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கணக்கன்குப்பம் ஊராட்சி மன்ற தலைவா் சுலோச்சனா ஜெயபால் செய்திருந்தாா்.