செய்திகள் :

'சிவப்பு துண்டுடனேயே தவெகவில் பயணிப்பேன்!' - தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்திருக்கிறார்.

சி.மகேந்திரன்
சி.மகேந்திரன்

திமுக, அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் தவெக-வில் இணைந்து வரும் சூழலில், திடீரென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெக-வில் இணைந்திருக்கிறார். 12 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளராக இருந்த அவர், இன்று பனையூரில் அமைச்சர்கள் ஆனந்த், கீர்த்தனா, வெங்கட்ரமணன் முன்னிலையில் தவெக-வில் இணைந்திருக்கிறார்.

தவெக-வில் இணைந்தது குறித்து சி.மகேந்திரன் பேசுகையில், 'தவெக வென்றது ஒரு ஜனநாயக புரட்சி. தேர்தலில் தவெக சாதியை ஒழித்திருக்கிறது. விஜய்யால் ஊழலை ஒழிக்க முடியும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. எளிய மக்களுக்காக காந்தி, பெரியார் உருவாக்கியதை போல பெரிய இயக்கமாக இந்த இயக்கம் வரும். நாமெல்லாம் இணைந்து பயணிக்க வேண்டும். சிவப்பு துண்டுடனேயே இந்த இயக்கத்தில் பயணிக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

சி.மகேந்திரன்
சி.மகேந்திரன்

ஜூன் 22 ஆம் தேதி முதல்வர் விஜய்யின் பிறந்தநாள். அதை முன்னிட்டு மாற்றுக்கட்சியினர் பலரும் தவெகவில் இணையவிருப்பதாக தகவல்.

'நாங்க என்ன கருணாநிதியா... ஸ்டாலினா?' - சீறும் அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் | பேட்டி

சட்டமன்றக் கூட்டத்தொடர் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில, 17.06.2026 தேதியில் ஜூனியர் விகடன் இதழில் வெளியான அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டியின் ஒரு பகுதி இங்கே.. CTR Nirmal Kumar - TVK... மேலும் பார்க்க

``மேகதாது என் இதயத்திற்கு நெருக்கமானது: முதல்வர் விஜய்யுடன் பேசத் தயார்!"- டி.கே.சிவக்குமார்

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மேகதாது அணை மற்றும் குடிநீர் திட்டம் தொடர்பாக, ``தமிழ்நாட்டின் முதல்வர் சி.ஜோசப் விஜய் உடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறேன்" என கர்நாடக முதல்வரு... மேலும் பார்க்க

ஆளுநர் உரை: ``வரவேற்கிறோம்... ஆனால் விளக்கம் வேண்டும்" - சிபிஎம் சந்தேகங்களும் கேள்விகளும்!

இன்று தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையில் தவெக அரசின் திட்டங்கள், கொள்கைகள் குறித்து இடம்பெற்றவை தற்போது விவாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சிபிஎம் சண்முகம் தன் எக்ஸ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி; சாட்டையைச் சுழற்றும் ஆட்சியரின் நடவடிக்கை தொடருமா?!

ஆக்கிரமிப்பு குடோனாக மாறிய சாலைகள்புதுச்சேரியின் நகர்ப்புற சாலைகள் அனைத்தும் பிரெஞ் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை. பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட சாலைகள் என்றாலும், தற்போதைய மக்கள்... மேலும் பார்க்க

`5 வருடங்கள் உண்மையாக உழைத்தேன்; சில பெண் தலைவர்கள்..!'- காங்கிரஸிலிருந்து திமுகவில் இணைந்த ஸ்ரீநிதி

கோவையைச் சேர்ந்த ஸ்ரீநிதி, இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீநிதி சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்... மேலும் பார்க்க