ஆபாசக் குறுஞ்செய்தி? ``ஆட்சியரே புகார் அளித்தால்தான் நடவடிக்கையா?" - தமிழிசை சௌந...
`சீன பெண் ஏஜென்ட்டுடன் திருமணம் மீறிய உறவு?'- ஆட்டம் கண்ட Nvidia தலைவரின் சாம்ராஜ்யம்; என்ன நடந்தது?
உலகப் புகழ்பெற்ற ‘என்விடியா’ (Nvidia) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினி சிப் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங். இவர் தனது மனைவி லோரி ஹுவாங்கை திருமணம் செய்து 41 ஆண்டுகள் ஆகின்றன.
இவர்களுக்கு மேடிசன் என்ற மகளும் உள்ளார். 2025 மே மாதம், தைவானில் உள்ள ஓர் உணவகத்தில் ஜென்சன் ஹுவாங், சிங்கப்பூரின் 'மெகாஸ்பீட்' (Megaspeed) நிறுவன முன்னாள் பெண் அதிகாரியான ஆலிஸ் ஹுவாங் என்பவருடன் உணவருந்த சென்றுள்ளார். அங்கு ஜென்சனின் மகள் மேடிசன் மற்றும் அவரது நிச்சயதார்த்த கணவரும் உடன் இருந்துள்ளனர். அந்த விருந்தின்போது ஜென்சன், ஆலிஸின் இடுப்பில் கைபோட்டு கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். இதை அவரது மகளே தனது கைபேசியில் புகைப்படமும் எடுத்துள்ளார்.

ஆலிஸ் ஹுவாங், சீனாவின் அரசு உளவு அமைப்பிற்கு (MSS) நெருக்கமானவர் என்று அமெரிக்க உளவுத்துறை சந்தேகித்தது. என்விடியா நிறுவனத்தின் அதிநவீன AI சிப்களை சீனாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு தடை விதித்திருந்த நிலையில், ஆலிஸ் மூலமாக சுமார் 4.8 பில்லியன் டாலர் மதிப்பிலான கணினி வளங்கள் மற்றும் சிப்கள் சீன மின்-வணிக நிறுவனமான 'அலிபாபா'விற்குச் சட்டவிரோதமாகக் கைமாறியிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்தது.
அமெரிக்க அரசின் உளவுத்துறையும் விசாரணை அமைப்புகளும் தன் பின்னணியைத் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியதால், நவம்பர் 8, 2026 அன்று ஜென்சன் ஹுவாங் என்விடியா ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில், தான் தனது மனைவிக்குத் துரோகம் செய்து ஆலிஸுடன் தொடர்பில் இருந்ததை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.
ஜென்சனின் இந்த ஒப்புதல் வெளியானதும் பங்குச்சந்தையில் பெரும் அதிர்வு ஏற்பட்டது. வெறும் 30 நிமிட வர்த்தகத்தில் அவரது சொத்து மதிப்பில் 7.4 பில்லியன் டாலர் (சுமார் ₹60,000 கோடிக்கும் மேல்) சரிந்து, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்குச் சென்றார்.
தற்போது இந்த உணவக வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருமணம் மீறிய தொடர்பு ஜென்சனின் மகளுக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒரு "திறந்த ரகசியமாகவே" இருந்திருக்கிறது என்பதும், அமெரிக்க அரசு நெருக்கடி கொடுத்த பிறகே ஜென்சன் இதை ஒப்புக்கொண்டார் என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. அதேசமயம், ஜென்சன் சீனா ஏஜென்ட்டின் வலையில் விழுந்தாரா என்பது குறித்து என்விடியா நிறுவனம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb












