செய்திகள் :

சுதந்திர தின விழா வினாடி-வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி; கேரள கல்வித்துறையில் சர்ச்சை

post image

கேரள மாநிலம் காசர்கோடு, மஞ்சேஸ்வரம் மற்றும் கும்பளா ஆகிய கல்வித் துணை மண்டலங்களில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக கல்வித் துறை சார்பில் சுதந்திர தின விழா வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. ​

அதில், பிரிட்டிஷாரிடம் இருந்து அதிகபட்ச தண்டனையைப் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் யார்? என்ற கேள்விக்கான விடைக்குறிப்பில் வி.டி.சவர்க்கர் என்று கொடுக்கப்பட்டிருந்தது. இது வரலாற்று உண்மைகளுக்கு முற்றிலும் புறம்பானது மற்றும் சவர்க்கரைப் புகழும் நோக்கம் கொண்டது என சி.பி.எம் கண்டனம் தெரிவித்துள்ளது. ​

இதுகுறித்து சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ​முன்னாள் அமைச்சர் பி.ஏ.முஹமது ரியாஸ் கூறுகையில், "வரலாற்றைத் திரிக்கவும், கல்வியை மதமயமாக்கவும் மதச்சார்பற்ற கேரளா ஒருபோதும் அனுமதிக்காது. கேரளாவின் மதச்சார்பற்ற கல்விப் பாரம்பர்யத்தை உடைக்க முயலும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கக் கூடாது.

​இது வெறும் ஒரு வினாடி-வினா கேள்வியின் பிரச்னை மட்டுமல்ல, குழந்தைகளுக்கு வழங்கப்படும் வரலாறு யாருடைய பார்வையில் கற்பிக்கப்படுகிறது என்ற முக்கியமான அரசியல் கேள்வியாகும். சங்பரிவாரின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அரசு நிர்வாகம் வழியமைத்துக் கொடுக்கக் கூடாது" என்றார்.

முன்னாள் அமைச்சர் முஹம்மது ரியாஸ்
முன்னாள் அமைச்சர் முஹம்மது ரியாஸ்

இந்த வினாடி-வினா போட்டிக்கான கேள்விகள், குறிப்பிட்ட மூன்று துணை மண்டலங்களின் சமூக அறிவியல் மன்ற அசோசியேஷன் பொறுப்பாசிரியர்களால் தயாரிக்கப்பட்டவை எனவும், ​வினாத்தாள் தயாரிப்பைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடனேயே இக்கேள்வி இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.​

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என கேரள கல்வி அமைச்சர் ஷம்சுதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கல்வி அமைச்சர் ஷம்சுதீன் கூறுகையில், "அந்த வினாடிவினா நிகழ்ச்சிக்கும் கல்வித்துறைக்கும் சம்பந்தம் இல்லை. சுதந்திர தின விழா வினாடி-வினா போட்டி கல்வித்துறை காலண்டரில் குறிப்பிடப்படவில்லை.

அது உள்ளூர் அளவில் அமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். அதில் பிழையான கேள்வி இடம்பெற்றுள்ளது. அந்நிய ஆட்சியின் கொடுமைகளைச் சந்தித்த மாமனிதர்கள் பலர் உள்ளனர்.

சாவர்க்கர்
சாவர்க்கர்

இது தொடர்பாக கல்வித் துறை பொது இயக்குநரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வி தயாரித்த ஆசிரியரின் தரப்பில் சில குறிப்பிட்ட அஜெண்டாக்களை அமல்படுத்தும் முயற்சி நடந்துள்ளது.

தனிப்பட்ட நபர்களின் அஜெண்டாக்களைச் செயல்படுத்துவதற்கான இடம் கல்வித் துறை அல்ல. வந்தே பாரதம் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்ற உத்தரவின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்" என்றார்.

சி.விஜயபாஸ்கருக்கு வெறும் மாவட்டப் பதவி மட்டும்தானா? ஆதங்கப்படும் ஆதரவாளர்கள்

அ.தி.மு.க-வில் ஒரு காலத்தில் ‘பவர்’ஃபுல் அமைச்சராக வலம் வந்தவர் சி.விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் மட்டுமின்றி, தமிழக அளவிலும் தனக்கெனத் தனிச் செல்வாக்கை வைத்திருந்தவர். சமீபத்தில் அ.தி.மு.... மேலும் பார்க்க

அதிமுக டு தவெக; விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு முக்கிய பதவி வழங்கிய விஜய்

சில மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களை தவெக நியமித்திருக்கிறது. அதன்படி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த அதிகவினர்களுக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ... மேலும் பார்க்க

எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக குண்டம் இறங்கிய நிர்வாகி; பதவியைப் பறித்த தலைமை!

அ.தி.மு.க-விற்குள் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில், எஸ்.பி. வேலுமணியை அக்கட்சியின் பொதுச்செயலாளராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கோவை குறிச... மேலும் பார்க்க

திருவாரூர்: மன்னார்குடியில் தனியார் மருத்துவக் கல்லூரி? - முயற்சியில் பெண் பேராசிரியர்!

இந்தியாவில் மருத்துவக் கல்வியை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் புதிய அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை கூடுதலாக திறக்க தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு... மேலும் பார்க்க

அமித் ஷா, இன்று மாலை திருவண்ணாமலை கோயிலுக்கு வருகை; பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதியம் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்... மேலும் பார்க்க

ஈரான்: ``உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா கமேனி?" - இஸ்ரேல் ஊடகங்கள் சொல்லும் தகவல்?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராகப் பொறுப்... மேலும் பார்க்க