செய்திகள் :

`சுவரொட்டியில் பார்த்தவரை நேரில் சந்தித்தேன்' - அனிஷ்மாவின் நீண்ட கால கனவை நனவாக்கிய சூர்யா!

post image

சிறை படத்தின் மூலம் தமிழ் திரையுலகம் கடந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் நடிகை அனிஷ்மா. சிறைப் பட வெற்றியைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் அடுத்து வெளியாகியிருக்கும் யூத் திரைப்படமும், அதில் இவர் நடித்த கதாப்பாத்திரமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகை அனிஷ்மா நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை எனப் பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஆதர்ச நாயகனை நேரில் சந்தித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அனிஷ்மா
அனிஷ்மா

அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``2005-ஆம் ஆண்டு முதல் என்னை வெட்கப்பட வைத்தவர் சூர்யா. பள்ளிக்குச் செல்லும் முன்பு தினமும் காலையில் 'சுற்றும் விழிச் சுடரே' பாடலைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன். அவரது சுவரொட்டிகளை என் வீட்டுச் சுவர்களில் ஒட்டி வைத்திருந்தேன். ஒரு சிறந்த நடிகராகவும், நல்ல மனிதராகவும் அவரை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். இறுதியாக, அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது அனிஷ்மாவை அன்புடன் வரவேற்ற சூர்யா, அவரது திரைப்பயணம் மற்றும் தற்போதைய செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். சூர்யா போன்ற ஒரு பெரிய நட்சத்திரம், தன்னிடம் காட்டிய எளிமையும் கனிவும் தன்னை மேலும் வியக்க வைத்ததாக அனிஷ்மா கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், "உண்மையான ரசிகையின் கனவு நனவாகியுள்ளது" என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Doraemon: விடைபெற்றார் அனிமேஷனுக்கு உயிர் கொடுத்த கலைஞன்! யார் இந்த சுடோமு ஷிபயாமா?

நமது பால்ய கால நினைவுகளை அழகாக்கிய அந்த நீல நிற மாயப் பூனையான டோரிமானின் (Doraemon) அனிமேஷன் உலகை உருவாக்கிய பிதாமகன் சுடோமு ஷிபயாமா (Tsutomu Shibayama) சமீபத்தில் தனது 84-வது வயதில் விடைபெற்றார். Tsu... மேலும் பார்க்க

கெணத்த காணோம்: "மக்களின் பிரச்னைகளை என் மூலம் சொல்லுங்கள்... காத்திருக்கிறேன்" - நடிகர் யோகிபாபு

நடிகர் யோகிபாபு நடிப்பில், மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'கெணத்த காணோம்'. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொ... மேலும் பார்க்க

KD:The Devil - சஞ்சய் தத்தின் `சர்கே சுனார்' பாடலுக்கு வலுக்கும் கண்டனங்கள்! ஆபாச வரிகளால் சர்ச்சை!

சமீபகாலமாக இந்தியத் திரையுலகில் திரைப்படங்களின் ப்ரோமோஷனுக்காகவும், வணிக வெற்றிக்காகவும் ஐட்டம் சாங்ஸ் என்று சொல்லப்படும் ஸ்பெஷல் நடனப் பாடல்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ரசிகர்களைக் கவர... மேலும் பார்க்க

``இந்தச் சூழல் வந்தால், அன்றே பாடுவதை நிறுத்திவிடுவேன்" - மனம் திறந்து பேசிய ஸ்ரேயா கோஷல்

இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் தன் இன்னிசைக் குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல். இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார... மேலும் பார்க்க

Oscar: Michael B.Jordan, Jessie Buckley: 98-வது ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் யார் யார்? முழு விவரம்

98-வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஆஸ்கர் விருதைப் பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ...சிறந்த நடிகர் விருது:'Sinners' திரைப்படத்திற்காக மைக்கேல் பி. ஜோர்டான். சிறந்த துணை நடி... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தலாமா?" - நடிகர் ராஜேந்திர பிரசாத்திற்கு நாசர் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் தெலுங்கு நடிகர் காந்தா ராவ் குறித்த பாராட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் உரையாற்றும்போது, காந்தாராவ் நடித்த கதாபாத்திரங்கள், அவர் ... மேலும் பார்க்க